டெல்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து 10 மாதங்களாகச் சரிந்து ஆகஸ்ட் மாதமும் -4.95 சதவீதமாகச் சரிந்துள்ளது.
இத்தகைய நிலைக்குக் கச்சா எண்ணெய் விலை நிலை மற்றும் உணவுப் பொருட்களின் பற்றாக்குறை முக்கியக் காரணமாக உள்ளது என மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பணவாட்ட நிலை..
ஜூலை மாத்தில் -4.05 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் (WPI), ஆகஸ்ட் மாதத்தில் -4.95 சதவீதமாகச் சரிந்துள்ளது.
கச்சா எண்ணெய்
கடந்த ஒரு வருடத்தில் கச்சா எண்ணெய் விலைகள் சுமார் 16.50 சதவீதமும், உணவுப் பொருட்களின் விலைகள் 1.13 சதவீதமும் குறைந்துள்ளது.
உற்பத்தி
இந்நிலையில் நாட்டின் உற்பத்தி அளவுகளும் 1.92 சதவீதம் வரை குறைந்து நாட்டின் பணவீக்கத்தைத் தொடர்ந்து சரிவு பாதையிலேயே வைத்துள்ளது.
சில்லறை விலை பணவீக்கம்
இந்நிலையில் சில்லறை விலை பணவீக்கம் கணிப்புகளுக்குக் குறைவாக 3.47 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. ஆர்பிஐ மற்றும் இந்தியாவில் சில முக்கிய நிதியியல் அமைப்புகள் நாட்டின் சில்லறை விலை பணவீக்கத்தை 4 சதவீதமாகக் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் சுப்பிரமணியன்
மத்திய அரசின் தலைமை பொருளாதாக ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் கடந்த மாத துவக்கத்தில் நாட்டின் பணவாட்ட நிலையைக் கண்டித்து உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கவும், புதிய முதலீடுகளைக் கவரவும் அறிவுறுத்தினார்.
ரிசர்வ் வங்கி
இந்நிலையில் பணவாட்ட நிலையைக் களைய ரிசர்வ் வங்கி தனது அடுத்த நாணய மறுஆய்வு கொள்கையில் வட்டி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இவ்வட்டிக் குறைப்பு பணவாட்ட நிலையை மட்டும் தீர்க்கும் விதமாக இல்லாமல் அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு பாதிப்புகளையும் எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
தெரிந்ததும்.. தெரியாததும்..
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications