டெல்லி: உலகப் பொருளாதாரத்திற்குச் சீனாவின் வீழ்ச்சி மிகப்பெரிய பாதிப்பை அளித்து வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று, குறிப்பாக வளரும் நாடுகளான இந்தியா போன்ற முக்கிய நாடுகளின் வளர்ச்சிக்குச் சீனா உண்மையில் முட்டுக்கட்டையாக உள்ளது.
ஆனால் உலகப் பொருளாதாரத்திற்குச் சீனா மட்டும் தான் பாதிப்பை ஏற்படுத்து வருகிறதாக என்றால் உண்மையில் இல்லை. சீன பொருளாதாரத்தையும் தாண்டிப் பல விஷயங்கள் உள்ளது..
இயற்கை சீற்றம்
அடுத்த ஒரு வருட காலத்தில் உலகளவில் சுமார் 4,560 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜிடிபி மிகப்பெரிய பாதிப்பில் உள்ளது.
இதில் 53 சதவீதம் இயற்கை சீற்றத்தின் மூலமும், 24 சதவீதம் மனிதன் ஏற்படுத்தும் சேதங்கள் மூலமும், 23 சதவீதம் பங்குச்சந்தை வீழ்ச்சியின் மூலமும் 4,560 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜிடிபி பாதிப்படையும் நிலை உருவாகியுள்ளது.
எண்ணெய் மற்றும் இணையத் திருட்டு
அதுமட்டும் அல்லாமல் எண்ணெய் விலை, இணையப் பாதிப்பு எனப்படும் சைபர் அட்டாக், தங்கம் இருப்பு அளவுகள், தீவிரவாதம், மற்றும் பிற காரணங்களின் மூலம் சர்வதேச அளவில் 1,077 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் பாதிப்படையும் நிலை உள்ளது.
இதில் எண்ணெய் விலை நிலையின் மூலம் 38 சதவீதம் வரை பாதிப்படைய உள்ளது.
டெல்லி.. மும்பை..
ஆசியாவில் இயற்கை சீற்றத்தின் மூலம் அதிகம் பாதிக்கப்படும் நகரங்கள் பட்டியலில் டெல்லி 4வது இடத்திலும், மும்பை 5வது இடத்திலும் உள்ளது. இப்பட்டியலில் முதல் 3 இடங்களில் ஷாங்காய், டோக்கியோ மற்றும் பெய்ஜிங் மாகாணங்கள் இடம்பெற்றுள்ளது.
சென்னை
அதேபோல் இந்தியாவில் அதிகப் பாதிப்படையும் நகரங்கள் பட்டியலில் சென்னை 6வது இடத்தில் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜிடிபி பாதிப்படையும் நிலை உருவாகியுள்ளது. மேலும் இந்த இழப்பு மனித தொற்றுகளின் மூலம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிராத்திய பொருளாதாரப் பாதிப்பு...
மேலும் தென்கிழக்கு ஆசிய பகுதியில் புயல் காரணமாக 301 பில்லியன் டாலரும், மத்திய மற்றும் தென் ஆசிய நாடுகளில் தொற்றுகளின் மூலம் 263 பில்லியன் டாலர் ஜிடிபி பாதிப்படைய உள்ளது.
பங்குச்சந்தையின் வீழ்ச்சியின் காரணமாக மேற்கு ஆசிய பகுதிகளில் 366 பில்லியன் டாலரும், லத்தின் அமெரிக்காவில் 519 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதிப்புகள் உருவாக உள்ளது.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications