'குண்டு' பெண்களுக்கு வேலை இல்லை.. ஊழியர்களை மிரட்டும் 'ஏர் இந்தியா'..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவில் கூடுதலாக எடை கொண்ட 125 பணிப்பெண்களுக்கு விமானத்தில் பணி செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

கடந்த வருடம் இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி, ஏர் இந்தியா 125 பணிப்பெண்களுக்கு விமானத்தில் பணி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

600 பணிப்பெண்கள்

600 பணிப்பெண்கள்

ஏர் இந்தியா நிர்வாகம் கடந்த வருடமே 600 பணிப்பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உடல் எடையைக் குறைக்க அறிவுறுத்தியுள்ளது. தற்போது இதில் 125 பணிப்பெண்கள் தங்களது உடல் எடையைக் குறைக்க முடியாத நிலையில் உள்ளனர், எனவே இவர்களுக்கு விமானத்தில் பணிபுரிய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

பயணிகள் விமானப் போக்குவரத்தில் தகுதியில்லா உடல் நிலையைக் கொண்டுள்ள பணிப்பெண்கள் இக்கட்டான சூழ்நிலையில் திறன்பட வேலை செய்ய முடியாது என நிறுவனம் நம்புகிறது. இதனை மையமாக வைத்தே 125 பேருக்குத் தடை விதித்துள்ளது ஏர் இந்தியா.

பிஎம்ஐ

பிஎம்ஐ

விமானப் போக்குவரத்தின் விதிமுறைகள் படி ஆண்களின் பிஎம்ஐ 18-25 ஆகவும், பெண்களுக்கு 18-22ஆக இருக்க வேண்டும்.

முதல் முறையல்ல..
 

முதல் முறையல்ல..

ஏர் இந்தியா இதை முதல் முறையாகச் செய்வதில்லை, ஏற்கனவே 2009ஆம் ஆண்டு இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டது.

விதிமுறைகள்

விதிமுறைகள்

மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தை லாபகரமாக மாற்றும் பணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால் சந்தை விதிமுறைகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்கிறது. மேலும் நிறுவன செலவீன குறைப்பில் தனிக் குழு செயல்படுவதாக ஏர் இந்தியா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்மார்ட் சிட்டி

ஸ்மார்ட் சிட்டி

ஸ்மார்ட் சிட்டிகளின் மூலம் இந்திய மக்களுக்கு என்ன பயன்..?ஸ்மார்ட் சிட்டிகளின் மூலம் இந்திய மக்களுக்கு என்ன பயன்..?

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India Says "Fat" Crew Members Are Not Allowed To Fly

After certain employees did not "shape up," according to Air India's wishes, the international airline — the third largest in India — decided they would no longer be allowed to fly.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X