டெல்லி: அமெரிக்கச் சந்தையில் மருந்து விற்பனைக்குத் தடைசெய்யப்பட்ட ரான்பாக்ஸி நிறுவனத்தைச் சில மாதங்களுக்கு முன்பே 3.2 பில்லியன் டாலருக்குக் கைப்பற்றிய சன் பார்மா நிறுவனம். தற்போது அமெரிக்காவில் கண் சிகிச்சை மற்றும் அதற்கான மருந்து தயாரிக்கும் நிறுவனமான இன்சைட் விஷன் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
கடந்த 2 மாதத்தில் அமெரிக்கச் சந்தையில் மூன்றாவது முறையாக இந்திய நிறுவனங்கள் மருந்து தயாரிப்பு நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளது.
48 மில்லியன் டாலர் டீல்
இன்சைட் விஷன் நிறுவன கைப்பற்றுதல் குறித்துச் சன் பார்மா நிறுவனம் கூறுகையில், அமெரிக்காவில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மருந்து தயாரிக்கப்படும் இன்சைட் விஷன் நிறுவனத்தை 48 மில்லியன் டாலருக்குச் சன்பார்மா கைப்பற்றியுள்ளது.
இந்தத் திட்ட ஒப்பந்தத்தில் நிறுவனத்தின் அனைத்து விதமான கடன் மற்றும் பிரிமாற்ற கட்டணங்களும் அடங்கும் எனச் சன் பார்மா தெரிவித்துள்ளது.
3.8 மில்லியன் டாலர் வருவாய்..
ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த 6 மாத காலகட்டத்தில் இன்சைட் விஷன் 3.8 மில்லியன் டாலர் வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. அதேபோல் 7.5 மில்லியன் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. 2015ஆம் ஆண்டு முடிவில் இந்நிறுவனத்தைக் கைப்பற்றும் பணிகள் முழுமையாக முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 இந்திய நிறுவனங்கள்
கடந்த 2 மாதத்தில் லூபின் மற்றும் சிப்லா ஆகிய நிறுவனங்கள் அமெரிக்காவில் 2 நிறுவனங்களைக் கைபற்றித் தனது சந்தையை விரிவாக்கம் செய்துள்ளது.
சிப்லா
இந்திய பார்மா துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் சிப்லா, அமெரிக்காவில் செயல்படும் இரண்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை 3,630 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.
பார்மா துறையின் பிற முக்கிய செய்திகளுக்கு..
ரான்பாக்ஸி
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications