டெல்லி: உலகின் வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியா கூடிய விரைவில் முதல் இடத்தைப் பெறும் என பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (OECD) தெரிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் அடுத்த 2 வருட காலத்தில் உலகில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் இருக்கும் எனவும் இந்த அமைப்பு தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் எனவும், சர்வதேச பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் எனவும் OECD அமைப்பு கணித்துள்ளது. தற்போதைய பொருளாதாரப் பிரச்சனைகளில் அதிகளவில் பாதிக்காத நாடாக இந்தியா உள்ளது என 2015ஆம் ஆண்டின் இடைக்காலப் பொருளாதாரச் சூழ்நிலைகளை மையமாக வைத்து இந்தப் பாரீஸ் ஆய்வு மையம் தனது கணிப்புகளைப் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. ஆர்கனைஸேஷன் ஃபார் எகனாமிக் கோ-ஆபரேஷன் அண்ட் டெவலப்மென்ட் (OECD) OECD அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2015ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அளவுகள் 7.2 சதவீதமாகவும், 2016ஆம் ஆண்டில் இதன் அளவு 7.3 சதவீதமாக உயரும் எனவும் தெரிவித்துள்ளது. இக்காலகட்டத்தில் சீனா 6.7 சதவீதமாகவும் 2016ஆம் ஆண்டில் இதன் அளவுகள் 6.5 சதவீதமாகக் குறையும் எனவும் தெரிவித்துள்ளது. சீனாவில் நிலவும் உள்கட்டப்புப் பிரச்சனைகள் மற்றும் அளவிற்கு அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ள நிறுவன பங்கு மதிப்புகள் ஆகியவை சீனாவை அதிகளவில் பாதித்து வருகிறது. மேலும் ஓய்வுதியதார்ரகளின் நிதியை ஆபத்து அதிகம் உள்ள பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளதால், உலக நாடுகள் மத்தியில் இந்நாட்டின் மீதான முதலீட்டு நம்பிக்கை இழந்துள்ளது. அதேபோல் பிரேசில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் 2.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2016ஆம் ஆண்டில் கூடுதலாக 0.7 சதவீதம் வரை குறையும் என OECD அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நாட்டில் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் பொருளாதாரப் பிரச்சனைகளின் காரணமாகத் தங்களது உற்பத்தி அளவுகளை அதிகளவில் குறைத்து, நிறுவனங்களில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. உலக நாடுகளில் உள்ள முன்னணி பொருளாதார மற்றும் வங்கி அமைப்புகள் சர்வதேச பொருளாதார வளர்ச்சியை 3.5 சதவீதமாகக் கணித்துள்ள நிலையில், OECD அமைப்பு 3 சதவீதமாகக் குறைத்துள்ளது. இவ்வமைப்பின் முந்தைய கணிப்புகளில் இதன் அளவை 3.1 சதவீதமாகக் கணித்திருந்தது. இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம். கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
7.2 சதவீத வளர்ச்சி
உலகப் பொருளாதாரம்
இந்தியா
சீனா
பிரேசில்...
உலகப் பொருளாதார வளர்ச்சி
பெடரல் ரிசர்வ்
சமுக வலைத்தள இணைப்புகள்
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications