1 மாதத்தில் 5 லட்ச புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்த பந்தன் வங்கி..!
கொல்கத்தா: இந்தியாவில் பல முன்னணி மற்றும் பெரு நிறுவனங்களுக்கு மத்தியில் சிறப்பான திட்டங்களுடன் செயல்பட்ட பந்தன் நிதியியல் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் முழுமையான வங்கி சேவை அளிப்பதற்கான உரிமம் அளித்தது.

இதன் படி கடந்த மாதம் தனது சேவையை இந்தியா முழுவதும் துவங்கியது பந்தன் வங்கி. வங்கி சேவை துவங்கி 1 மாத காலத்தில் சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் பெற்றுச் சந்தையில் வேகமாகப் பந்தன் வங்கி வளர்ந்து வருகிறது.
இதனால் இவ்வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 83 லட்சமாக உயர்ந்துள்ளதாகப் பந்தன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சி.எஸ் கோஷ் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது பந்தன் வங்கி சுமார் 1.48 கோடி சேமிப்பு மற்றும் கடன் கணக்குகளை நிர்வகித்து வருகிறது.


Click it and Unblock the Notifications