மும்பை: அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி கண்டிப்பாக ரெப்போ விகிதத்தைக் குறைக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் பெடரல் வங்கி தனது முடிவுகளைக் கடைசி நேரத்தில் மாற்றிக்கொண்டது.
இதனால் ரிசர்வ் வங்கி தனது அடுத்த நாணய மறுஆய்வு கொள்கையில் வட்டி விகித குறைப்பை அறிவிக்காமல் நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்கும் பணிகளைத் தீவிரமாகச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதனால் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றம் இருக்காது எனச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனை ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் உறுதி செய்தார்.
ரகுராம் ராஜன்
மும்பையில் நடந்த முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரகுராம் ராஜன், நாட்டில் சில்லறை விலை பணவீக்கம் அடிப்படை காரணங்களுக்காக மட்டுமே 3.6 சதவீதமாக உள்ளது. இல்லையென்றால் அதன் அளவு 5 சதவீதமாக இருக்கும்.
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடைய நாட்டின் பணவீக்கத்தைக் குறைவான நிலையிலேயே வைக்க வேண்டும் என ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
பணவாட்டம்
ரிசர்வ் வங்கி மீண்டும் தனது வட்டி விகிதத்தைத் தொடர்ந்து குறைந்தால் மொத்த விலை பணவீக்கம் மேலும் குறையும் எனவும் ரகுராம் ராஜன் தெரிவித்தார். கடந்த 10 மாதங்களாக நாட்டின் மொத்த விலை பணவீக்கம் பணவாட்ட நிலையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாணய மறுஆய்வு கொள்கை
ரிசர்வ் வங்கி அடுத்த மாதம் வெளியிட உள்ள நாணய மறுஆய்வு கொள்கையில், சந்தையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் கொடுப்பது வட்டி விகிதம் மூலம் வளர்ச்சியை அடைவதை விடச் சிறந்த தொழில்துறை சூழல்களை உருவாக்கி அதன் மூலம் வளர்ச்சியை அடைவதே சிறந்த வழி எனவும் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
பிரிக்ஸ் நாடுகள்
சர்வதேச பொருளாதாரச் சந்தைகளில் பிரிக்ஸ் நாடுகளில் நிலவும் பிரச்சினைகளில் இந்தியா தனித் தீவாக உள்ளது. குறிப்பாகப் பிரேசில் வேகமாக வளர்ச்சியடையத் திட்டங்களை வகுத்தது. ஆனால் இப்போது ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் அமைப்பு இந்நாட்டிற்கான தகுதியை குறைத்துள்ளது.
பிரேசில் அதிகம் செலவு இந்நாட்டின் நிதிநிலை மோசமான நிலையில் உள்ளது. அதேபோல் சீனாவும் அதிகப்படியான சந்தை மதிப்பீடு மற்றும் முதலீட்டின் மூலம் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளது.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications