மும்பை: அடுத்த 10 வருடத்தில் டாடா குழுமத்தின், முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து இந்நிறுவன தலைவர் சைரஸ் மிஸ்திரி விஷன் 25 என்னும் தலைப்பில் இந்நிறுவனத்தின் ஆண்டு நிர்வாகக் குழு கூட்டத்தில் அறிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்குள் டாடா குழுமத்தில் டிசிஎஸ் நிறுவனத்தைப் போன்று பல நிறுவனங்கள் உருவாக வேண்டும் என அறிவித்துள்ளார். டாடா குழுமத்தின் மொத்த வருவாயில் 58 சதவீத்தை டிசிஎஸ் நிறுவனம் அளிக்கிறது.
சைரஸ் மிஸ்திரி
டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் ரத்தன் டாடா வெளியேறியுடன், இந்நிறுவனத்தில் அதிகப் பங்குகளைக் கொண்ட பலோன்ஜி மிஸ்திரி அவர்களின் நிர்வாகப் பொறுப்பிற்கு வந்தது. இதனால் பலோன்ஜி மிஸ்திரி அவர்களின் மகன் சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதன் பின் கடந்த ஒன்றறை வருடமாக டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகச் சைர்ஸ் மிஸ்திரி பணியாற்றி வருகிறார்.
வருடாந்திர கூட்டம்..
கடந்த மாத இறுதியில் டாடா குழுமத்தின் தலைவர்களின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நிறுவனத்தின் அனைத்து முக்கியத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரி தனது விஷன் 25 அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
டாப் 25
2025ஆம் வருடத்திற்குள் உலகில் அதிகச் சந்தை மதிப்புக் கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் டாடா குழுமம் டாப் 25 இடத்திற்குள் வர வேண்டும் எனத் தனது முதல் கனவை விஷன் 25 அறிக்கையில் பதிவு செய்தார்.
தற்போது இந்நிறுவனம் உலகளவில் டாப் 70 இடங்களுக்குள் தாவி கொண்டு இருக்கிறது.
25 சதவீத மக்கள் தொகை
இதேபோல் நிறுவனம் உலகளவில் சுமார் 25 சதவீத மக்களுக்குத் தங்கள் சேவையைக் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் மிஸ்திரி தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் 900 மில்லியன் மக்களுக்கு இந்நிறுவன சேவை கொண்டு சேர்க்கப்படுவதாக டாடா தெரிவித்துள்ளது.
25 நிறுவனங்கள்
டாடா குழுமத்தின் சுமார் 100 நிறுவனங்களும், பங்குச்சந்தை 25 நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.
அடுத்த 10 வருடத்திற்குள் டிசிஎஸ் நிறுவனத்தின் அளவிற்கு வருவாய் மற்றும் லாபத்தை அளிக்கும் 25 நிறுவனங்கள் டாடா குழுமத்தில் உருவாக வேண்டும் என மிஸ்திரி தெரிவித்துள்ளார்.
வருவாய் மற்றும் சந்தை மதிப்பு
மேலும் வளர்த்து வரும் நிறுவனங்களின் வருவாய் மற்றும் சந்தை மதிப்பை அதிகரிக்கத் தொடர்ந்து செயல்பட நிர்வாகம் திட்டமிட வேண்டும் எனவும் நிர்வாகத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.
சிறு நிறுவனங்கள்
டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் சிறு நிறுவனங்களைப் புதிய முதலீடு மற்றும் வளர்ச்சி திட்டங்களுடன் மேம்படுத்த வேண்டும் எனவும் மிஸ்திரி திட்டமிட்டுள்ளார்.
புதிய துறைகள்
அதேபோல் 2025ஆம் ஆண்டுக்குள் சில்லறை வர்த்தகம், நிதியியல் சேவை மற்றும் கட்டுமானத் துறையில் டாடா குழுமம் சிறந்து விளங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications