டிராய் அமைப்பின் புதிய உத்தரவு.. உடனடியாக நடவடிக்கை எடுத்த ஏர்டெல்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் மொபைல் சேவை நிறுவனங்களில், கால் டிராப் அதாவது பேசிக்கொண்டு இருக்கும்போதே திடீரென இணைப்பு துண்டிக்கப்படுவதால் நிறுவனங்கள் கூடுதலாக வருமானம் பெற்று வருவதாக மத்திய தொலைத்தொடர்பு அமைப்பான டிராய்-க்குப் புகார்கள் குவிந்தது.

 

இதன் பின் டிராய் அமைப்பு, இப்பிரச்சனையைக் களையும் விதமாக அனைத்து நிறுவனங்களையும் தங்களது வாடிக்கையாளர்களைப் பே-பர் செக்கெண்ட் கட்டண முறைக்கு மாற்ற உத்தரவிட்டது.

கூடுதல் வருமானம் எப்படி..

கூடுதல் வருமானம் எப்படி..

பொதுவாக மொபைல் சேவை நிறுவனங்கள் 30 நொடிகளுக்கு 50 காசுகள் என்று திட்டத்தை வகுத்திருந்தால், 20 நொடிகளில் நமது இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ அல்லது நாம் துண்டித்தாலோ நிறுவனங்கள் 50 காசுகளை நமது கணக்கில் இருந்து பிடித்துக்கொள்ளும்.

இதனால் நிறுவனத்திற்கு 10 நொடிகளும் லாபம், கூடுதலான வருமானமும் கிடைக்கிறது.

டிராய் அமைப்பு

டிராய் அமைப்பு

இப்பிரச்சனையைக் களையவே, டிராய் அமைப்பு மொபைல் சேவை நிறுவனங்களைத் தங்களது வாடிக்கையாளர்களைப் பே-பர் செக்கெண்ட் கட்டண முறைக்கு மாற்ற உத்தரவிட்டது.

இதன் படி ஏர்டெல் நிறுவனம் உடனடியாக அனைத்து ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களைப் பே-பர் செக்கெண்ட் கட்டண முறைக்கு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏர்டெல்..
 

ஏர்டெல்..

இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில் 94.4% பேர் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் தான், பே-பர் செக்கெண்ட் கட்டண முறைக்கு மாற்றியதன் மூலம் இந்நிறுவனத்திற்குக் கணிசமான வருமானம் பாதிக்கப்படும்.

கோபால் விட்டல்..

கோபால் விட்டல்..

இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென் ஆசிய பிராந்திய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் கூறுகையில், நிறுவனத்தின் 95 சதவீத வாடிக்கையாளர்களை நொடி அடிப்படையிலான கட்டண முறைக்கு மாற்றப்பட்டதுள்ளது. இதனால் நிறுவனத்தில் கால் டிராப் பிரச்சனை களையப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

சேவை விரிவாக்கம்

சேவை விரிவாக்கம்

தற்போதைய நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது சேவையை மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் பல கட்ட பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது எனவும் கோபால் விட்டல் தெரிவித்தார்.

'ரூ.1,380 கோடி' திட்டம்

'ரூ.1,380 கோடி' திட்டம்

ஜிஎஸ்டி அமைப்பை வடிவமைக்கும் 'ரூ.1,380 கோடி' திட்டத்தை 'இன்போசிஸ்' தட்டிச்சென்றது..

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel moves pre-paid customers to per-second payment

Bharti Airtel has moved all its pre-paid subscribers across the country to pay-per-second, ensuring customers pay only for the time they use the network.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X