நாடு நாடாக சுற்றினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கும் மோடி..!

டெல்லி: அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கப் பல திட்டங்களுடன் பிரதமர் மோடி புதன்கிழமை அமெரிக்கா சென்று, சிலிக்கான் வேலியில் முக்கிய நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து நேரடியாகப் பேச உள்ளார்.

குறைந்த காலகட்டத்தில் அதிகளவிலான நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டாலும், இவரது தொடர் பயணத்தின் மூலம் இந்தியாவில் அன்னிய முதலீட்டு அளவு சுமார் 27 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

12 நாடுகள்

12 நாடுகள்

கடந்த 2014-15ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யப்பட்ட, டாப் 12 நாடுகளுக்கும் மோடி சென்று இந்திய சந்தையின் மீதான முதலீட்டைக் கவர்ந்துள்ளார்.

இக்காலகட்டத்தில் மோடி சென்ற 12 நாடுகளில் இருந்து சுமார் 19.78 பில்லியன் டாலர் ஆதாவது 1.3 லட்சம் கோடி ரூபாய் இந்திய சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

 

மொத்த முதலீடு

மொத்த முதலீடு

2014-15ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் சுமார் 30.93 பில்லியன் டாலர் வரை அன்னிய முதலீடாகக் குவிந்துள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் சுமார் 27 சதவீதம் அதிகம்.

முதலீட்டு நம்பிக்கை..

முதலீட்டு நம்பிக்கை..

இதுமட்டும் அல்லாமல் அடுத்த 5 வருடத்தில் ஜப்பான் 35 பில்லியன், தென் கொரியா 10 பில்லியன் டாலர் தொகையை இந்திய சந்தையில் முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளது.

அதன்பின் சீனா 20 பில்லியன் டாலரும், பிரான்ஸ் 2 பில்லியன் டாலரும் முதலீடு செய்யவதாகத் தெரிவித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் கடந்த மாதம் அரபு நாடுகளுக்குச் சென்ற மோடி, அங்குள்ள முதலீட்டாளர்கள் இந்திய கட்டுமானத்துறையில் சுமார் 75 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

 

அடுத்த (முதலீடு) பயணம் எங்கே..??

அடுத்த (முதலீடு) பயணம் எங்கே..??

நவம்பர் மாதத்தில் பிரதமர் மோடி புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்காகப் பிரட்டன் செல்ல உள்ளார். அதன் முன் இதே காரணங்களுக்காக அக்டோபர் மாத்தின் முதல் வாரத்தில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் இந்தியா வருகிறார்.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

இந்திய சந்தையில் அன்னிய முதலீடு அதிகளவில் கவர 2014ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டம் மிக்க முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதன் பின் அக்டோபர் 2014 முதல் ஏப்ரல் 2015ஆம் ஆண்டுக் காலம் வரையில் இந்தியாவில் அன்னிய முதலீட்டு அளவு சுமார் 48 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தொழில்துறை கொள்கை மற்றும் திட்டமைப்புத் துறை தெரிவித்துள்ளது.

 

அமெரிக்காவில் மோடி..

அமெரிக்காவில் மோடி..

வியாழக்கிழமை மாலை நேரத்தில் அமெரிக்காவில் தரையிறங்கும் பிரதமர் மோடி, முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழிற்துறை அமைச்சர்களைச் சந்திக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தப் பயணத்தின் மூலம் அமெரிக்கா-இந்தியா இடையிலான வர்த்தகம் புதிய வடிவத்தைப் பெறும் எனக் கணக்கிடப்படுகிறது.

 

 ஏர்டெல்

ஏர்டெல்

வங்கி IFSC குறியீடு

வங்கி IFSC குறியீடு

வங்கி IFSC குறியீட்டை தேடுவதில் குழப்பமா? கவலை வேண்டாம் இதை மட்டும் கிளீக் பண்ணுகோ...

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+