மும்பை: இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் 2வது இடத்தில் இருக்கும் திலீப் சங்வி, முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியுடன் அவ்வப்போது போட்டி போட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் பார்மா மற்றும் வர்த்தகத் துறையில் இவரை ஏழை சீஇஓ எனச் சித்தரிக்கப்படுகிறார்.
சன் பார்மா
1983ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் சன் பார்மா நிறுவனத்தின் மூலம் மருந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஈட்டுப்பட்டுள்ள திலீப் சங்வி இந்நிறுவனத்தின் தலைவராகவும், நிறுவனராகவும் இருக்கிறார்.
இந்நிறுவனத்தின் சிஇஓ-வாக இவர் வருடத்திற்கு 2.73 கோடி ரூபாய் மட்டுமே பெறுகிறார். சந்தையில் உள்ள பிற பார்மா துறை நிறுவனங்களின் சம்பளத்தை ஒப்பிட்டால் திலீப் சங்வி சம்பளம் மிகவும் குறைவு. இத்துறையில் ஒருவர் வருடத்திற்கு '37 கோடி ரூபாய்' சம்பளம் பெறுகிறார் தெரியுமா உங்களுக்கு...
லூபின்
பார்மா துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் லூபின் நிறுவனத்தின் தலைவர் டிபி குப்தா வருடத்திற்கு 37 கோடி ரூபாய் சம்பளத்தைப் பெறுகிறார்.
இதேபோல் இந்நிறுவனத்தின் துணை தலைவர் கமல் ஷர்மா 17 கோடி ரூபாயும், நீலேஷ் குப்தா 8.23 கோடி ரூபாய் வருடாந்திர சம்பளமாகப் பெறுகின்றனர்.
சிப்லா
முன்னணி நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டி அளிக்கும் சிப்லா நிறுவனத்தின் சீஇஓ சுபானு சக்சேனா வருடத்திற்கு 13.3 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகிறார்.
காடிலா ஹெல்த்கேர்
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பன்கஜ் படேல் வருடத்திற்கு 15 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகிறார்.
ஜிவி பிரசாத்
டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜிவி பிரசாத் வருடத்திற்கு 12.9 கோடி ரூபாயும், இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சதிஷ் ரெட்டி 9.6 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகிறார்.
கெலென்மார்க் மற்றும் பிஃபிசர் இந்தியா
இந்நிலையில் பன்னாட்டு நிறுவனங்களான கெலென்மார்க் நிறுவனத்தின் தலைவர் கெலென் சல்தான்ஹா 8.6 கோடியும், பிஃபிசர் இந்தியா நிறுவனத்தின் ஆஜஸ் 5.23 கோடி ரூபாய் சம்பளத்தையும் பெறுகிறார்.
கடைசி இடத்தில் திலீப் சங்வி
இப்பட்டியலில் நாட்டின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான சன் பார்மா நிறுவனத்தின் தலைவர் மற்றும் சீஇஓ-வான திலீப் சங்வி 2.73 கோடி ரூபாய் சம்பளத்துடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications