திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தவர் அல்லாத மக்கள் (என்ஆர்ஐ உட்படப் பிற மாநிலத்தவர்) கேரள வங்கிகளில் சுமார் ரூ.1 லட்சம் கோடி ரூபாய் வரை வைப்பு நிதியில் முதலீடு செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 30ஆம் தேதி முடிவில் கேரள வங்கிகளில் இவர்களின் வைப்பு நிதியின் அளவு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு வெளியிட்ட அறிக்கையின்படி மொத்த சேமிப்புத் தொகை ரூ. 1,17,349 கோடி. இது கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி இருந்த நிலவரத்தைக் காட்டிலும் 25 சதவீதம் அதிகமாகும். ஜூன் 30, 2014-ல் இருந்த சேமிப்பு ரூ. 94,097 கோடியாகும்.
கடந்த சில ஆண்டுகளாகக் கேரள மாநிலத்தவர் அல்லாதோர் கேரள வங்கிகளில் சேமிக்கும் தொகை அதிகரித்து வருகிறது. 2013-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி ரூ.75,883 கோடியாக இது இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளி நாடுகளில் பணிபுரியும் கேரள மாநிலத்தவர்களின் எண்ணிக்கை 23.63 லட்சமாகும். இவர்களின் மூலம் முக்கிய நிறுவனங்கள் மற்றும் கடன் பத்திரங்களில் அதிக வட்டி விகிதத்தை அளிக்கப்படுவதால் அதிகளவிலான முதலீட்டைக் கவர்கிறது.


Click it and Unblock the Notifications