மும்பை: அமெரிக்கப் பெடரல் வங்கியின் முடிவுகளுக்காகக் காத்திருத்த ரிசர்வ் வங்கி வருகிற செப்டம்பர் 29ஆம் தேதி தனது இருமாத மறுஆய்வு கொள்கையை வெளியிட உள்ளது.
இதில் ரிசர்வ் வங்கி குறைந்தபட்சம் 0.25 சதவீதமாவது தனது வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதால் உங்களின் கடன் வாங்கும் திட்டங்களைச் சில நாட்களுக்குத் தள்ளி வைக்கலாம்.

மின்சாரம், எரிவாயு, கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நாட்டின் பணவீக்கத்தின் அளவு தொடர்ந்த பணவாட்ட நிலையில் உள்ளது. இதனைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடன் விகிதமான ரெப்போ விகித்தை கண்டிப்பாகக் குறைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

செப்டம்பர் 29ஆம் தேதி வெளியிட உள்ள ஆர்பிஐ-யின் மறுஆய்வு கொள்கையில் வட்டிக்குறைப்பு கண்டிப்பாக இருக்கும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதியளித்துள்ளார்.
மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு இந்த வட்டி குறைப்பு மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் எனத் திட்ட வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications