பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட், தனது நிறுவன சேவை மற்றும் செயல்முறையை மேம்படுத்த கூகிள், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களில் இருந்து ஊழியர்களைத் தனது நிறுவன பணியில் அமர்த்தி வருகிறது.
சமீபத்தில் இந்நிறுவனத்தின் முக்கியப் பிரிவுகளில் தொழில்நுட்ப வல்லுனர்களாக மூவரை நியமித்துள்ளது.

இதன்படி அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த டேன் ராசன் கஸ்டமர் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் கூகிள் நிறுவனத்தில் பணியாற்றி ரவி பயகோட் பிளிப்கார்ட் நிறுவனத்தின் என்ஜினியரிங் மற்றும் அக்கவுன்டிங் பிரிவின் தலைவரா நியமிக்கப்பட்டுளார்.
மேலும் பிளிப்கார்டின் டிஜிட்டல் சரக்கு மற்றும் சேவை பிரிவின் திட்ட மேலாளகாக ஆனந்த லக்ஷமி நாராயணன் அவர்களை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றியவர்.


Click it and Unblock the Notifications