மும்பை: கமாடிட்டி சந்தையின் கட்டுப்பாட்டு அணையமான எப்எம்சி என அழைக்கப்படும் Forward Markets Commission, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி உடன் இணைக்க நிதியமைச்சர் இன்று மணியடித்து ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியாவில் நேசிய பங்குசந்தையில் நடந்த ஊழல் (NSEL Scam) வெளிச்சத்திற்கு வந்த பின், 12 வருடமாகப் போராடி நிதியமைச்சகம் அனுமதியோடு இரு சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையங்களும் தற்போது இணைந்துள்ளது.
செபி
செபி என்பது பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அணையமாகவும், முதலீட்டாளர்கள், பங்குகள் வெளியீடு, சந்தை இடர்களைக் களையும் உரிமைகள் எனச் சகல உரிமைகளையும் பெற்று பங்குச்சந்தையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.
கமாடிட்டி சந்தை
இச்சந்தையின் கட்டுப்பாட்டு அணையமாக மட்டுமே செயல்படும் எப்எம்சி அமைப்பு, சந்தையில் நிலவு பிரச்சனைகளைக் களையவும், வேறுபாடுகளைய தீர்க்கவும் உரிமைகள் இல்லாமல் இருக்கிறது.
இணைப்பு
இப்பிரச்சனைகளைக் களையவே எப்எம்சி அமைப்பிற்கு அதிகளவிலான உரிமைகள் மற்றும் பொறுப்புகளைக் கொடுத்து செபி அமைப்பிற்கு இணையாகக் கமாடிட்டி சந்தையைக் கட்டுப்படும் அமைப்பாக மாற்றவே இந்த இணைப்பிற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி அனுமதி அளித்துள்ளார்.
கண்காணிப்பு மட்டுமே..
இன்றைய நாள் வரை எப்எம்சி அமைப்பு கமாடிட்டி சந்தையில் நிகழும் வர்த்தகத்தைக் கண்காணிக்கும் பணியில் மட்டுமே இருந்தது வந்தது. இதில் உள்ள மாறுபட்ட வர்த்தகத்தையும், பிரச்சனைகளையும் களைய உரிமைகள் இல்லாமல் இருக்கிறது.
புதிய வேகத்தில் கமாடிட்டி சந்தை..
இப்புதிய இணைப்பின் மூலம் கமாடிட்டி சந்தை புதிய உச்சத்தை அடையும் என நம்பப்படுகிறது.
மேலும் நேசிய பங்குசந்தையில் நடந்த ஊழல் காரணமாக இச்சந்தையில் முதலீட்டாளர்கள் பலர் வெளியேறியுள்ளனர், இந்த இணைப்பின் மூலம் கமாடிட்டி சந்தையின் மீது முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கை உண்டாகும்.
சர்வதேச சந்தை
உலகளவில் பங்குச்சந்தையைக் காட்டிலும் கமாடிட்டி சந்தையிலேயே அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் நிறுவனங்களை விடவும் கமாடிட்டி பொருட்கள் மற்றும் அதன் மீதான வர்த்தகத்தைப் புரிந்துக்கொள்வது முதலீட்டாளர்களுக்கு எளிது.
ஒரு வருடம்..
அடுத்த ஒரு வருடத்திற்கு எப்எம்சி அமைப்பு தனது உரிமைகள் மற்றும் திட்டத்தை வகுத்து சந்தையின் பிற கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு இணையாகச் செயல்படும் அளவிற்கு உயர உள்ளது எனச் செபி அமைப்பின் தலைவர் யுகே சின்ஹா தெரிவித்தார்.
முதலீட்டாளர்களுக்கு என்ன பிரச்சனை..
இந்த இணைப்பின் மூலம் புரோக்கர்களின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் இச்சந்தையில் பரிமாற்றம் மீதான வரி அளவுகளும் அதிகரிக்கும் எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அருண் ஜேட்லி
இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் உள்ள போது அதற்கு இணையாகச் சந்தையில் முதலீட்டை ஈர்க்கும் வண்ணம் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்பட வேண்டும். இதன் ஒரு பகுதியே செபி மற்றும் எப்எம்சி இணைப்பு.
மேலும் இந்த இணைப்பின் மூலம் நாட்டின் வளர்ச்சி 6 -7 சதவீதத்தையும் தாண்டி வளர்ச்சி அடைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications