மும்பை: இந்திய வங்கிகளில் நிலவும் வராக் கடன் பிரச்சனையைக் குறைக்கவும், அரசு வங்கிகளுக்குக் கூடுதல் உரிமைகள் மற்றும் அதிகாரத்தை அளிக்க மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகளில் தனது முதலீட்டை 52 சதவீதமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதனால் வங்கி ஊழியர்களுக்குக் கூடுதல் பணிச் சுமையும், வங்கி நிர்வாகத்திற்கு அதிகம் கட்டுப்பட வேண்டிய நிலை உருவாகும்.
அருண் ஜேட்லி..
அனைத்து இந்திய வங்கி அமைப்புகளின் 68வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அரசு வங்கிகளுக்கு வர்த்தகச் சந்தையில் கூடுதல் அதிகாரம் மற்றும் உரிமைகள் தேவைப்படுகிறது.
இதனால் பணியாளர்கள் பிரச்சனைகள் முதல் வராக்கடன் அளவுகளின் உயர்வு போன்ற அனைத்தும் எளிமையாகவும், திறன்படச் செயல்படுத்தவும் முடியும் என ஜேட்லி தெரிவித்தார்.
52 சதவீத பங்கு இருப்பு
அரசுடைமை வங்கிகளின் மீதான மத்திய அரசின் முதலீட்டு அளவை 52 சதவீதமாகக் குறைப்பதன் மூலம் பல பிரச்சனைகளுக்கு எளிதான தீர்வுகள் எட்டப்படும் என அருண் ஜேட்லி 68வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பேசினார்.
பொதுத்துறை வங்கிகள்
இதன் மூலம் தனியார் வங்கிகளைக் காட்டிலும் பொதுத்துறை வங்கிகள் கூடுதலான உரிமைகள் பெற்றுச் சந்தையில் சிறந்து விளங்க முடியும். அதுமட்டும் அல்லாமல் தனியார் வங்கிகளுக்கு இணையாக வர்த்தகச் சந்தையில் போட்டுப்போட முடியும் என்றும் ஜேட்லி தெரிவித்தார்.
மோடியின் கருத்து..
இந்தியாவில் இனி எந்த ஒரு வங்கியும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலையீடு இல்லாமல் தனிதன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி, அருண் ஜேட்லியிடம் தெரிவித்தாகக் கூறினார்.
பங்கு இருப்பு..
தற்போதைய நிலையில், எஸ்பிஐ வங்கியில் 59 சதவீதமும், ஐடிபிஐ வங்கியில் 76.5 சதவீதமும், பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 59 சதவீதமும், கனரா வங்கியில் 64.5 சதவீத பங்குகள் மத்திய அரசின் கைவசம் உள்ளது.
அதேபோல் பாங்க் ஆஃப் பரோடா 57.5 சதவீதம், அலகாபாத் வங்கியில் 60 சதவீதம், ஆந்திர வங்கியில் 64.4 சதவீதம், பாங்க் ஆஃப் இந்தியாவில் 81.5 சதவீதம், சென்டரல் பாங்க் ஆஃப் இந்திய வங்கியில் 81.5 சதவீதம் என மத்திய அரசு அனைத்து முக்கிய வங்கிகளும் தனது பங்கு இருப்பை வைத்துள்ளது.
52 சதவீதம்..
இந்தப் பங்கு இருப்பு அளவுகளை 52 சதவீதமாகக் குறைக்கவே நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான குழு ஆலோசனை செய்து வருகிறது. இது மத்திய அரசின் நிதி திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதி எனவும் வங்கித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications