மும்பை: செவ்வாய்க்கிழமை காலையில் வெளியிடப்பட்ட ஆர்பிஐயின் இரு மாத மறுஆய்வு நிதியியல் கொள்கையில் நாட்டின் நிலவும் பணவாட்ட நிலையைத் தீர்க்க, வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடன் விகிதமான ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் வரை குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரெப்போ விகிதம்
ரகுராம் ராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் வரை குறைந்து 6.75 சதவீதமாக உள்ளது. இதனால் மக்கள் மற்றும் நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து குறைவான வட்டி விகிதத்தில் கடன்களைப் பெறலாம்.
ரிசர்வ் வங்கி
2015ஆம் துவக்கம் முதல் ரிசர்வ் வங்கி சுமார் நான்கு முறை தனது வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனால் கடந்த 10 மாதத்தில் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 1.25 சதவீதம் வரை வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.
சிஆர்ஆர்
வணிக வங்கிகள் தங்களது வைப்புத்தொகையில் ரிசர்வ் வங்கியிடம் வைப்பு வைக்கும் அளவீடான சிஆர்ஆர் விகிதத்தை 4 சதவீதமாக அறிவித்துள்ளது. இதில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
நாட்டின் வளர்ச்சி
இதனால் இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்புகள் 7.4 சதவீதத்தில் இருந்கு 7.6 சதவீதமாக உயர்ந்தப்பட்டுள்ளது.
வங்கிகளில் கடன்
ரிசர்வ் வங்கியின் இந்த வட்டிக்குறைப்பின் மூலம் வணிக வங்கிகளில் இனி வீட்டு கடன், ஆட்டோ லோன், முதல் தனிநபர் கடன் வரை அனைத்திலும் வட்டி விகிதம் குறைக்கும். ஆனால் வங்கிகளின் முடிவுகள் தன் கையில் உள்ளதால் மக்கள் பொருத்திருந்து வங்கிகளின் வட்டி விகித குறைப்பிற்கு பின் கடன்களை வாங்கலாம்.
கணிப்புகள்
மத்திய அரசின் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் இம்மாத துவக்கத்தில் நாட்டின் பணவாட்ட நிலையைப் போக்க ரிசர்வ் வங்கி கண்டிப்பாகத் தனது ரெப்போ விகிதத்தைக் குறைக்கும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
மத்திய அரசால் புதிதாக அமைக்கப்பட்ட நிட்டி அயோக் அமைப்பின் துணை தலைவர் அரவிந்த் பனக்கரியா அவர்களும் ஆர்பிஐ 50 முதல் 100 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தைக் குறைக்கும் எனத் தெரிவித்தார்.
புதிய மாற்றம்..
வர்த்தக சந்தையில் புதிய மாற்றம்... புதிய வேகத்தில் உயர தயாராகும் கமாட்டிட் சந்தை..
முழுமையாக படிக்க 12வது ஸ்லைடரை பார்க்கவும்...
வாக்கெடுப்பு
உலகின் முன்னணி வர்த்தகச் செய்தி நிறுவனமான ரெயூட்டர்ஸ் பொருளாதார வல்லுனர்கள் மத்தியில் நடத்திய வாக்கெடுப்பில், 51 வல்லுனர்களில் 45 பேர் ஆர்பிஐ தலைவர் ரகுராம் ராஜன் நாட்டின் வளர்ச்சி நோக்கத்திற்காகக் கண்டிப்பாக வட்டி விகிதத்தைக் குறைக்க அனுமதிப்பார் எனத் தெரிவித்தனர்.
பெடரல் வங்கி
அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகித உயர்வை டிசம்பர் மாதம் வரையில் ஒத்திவைத்துள்ளதால், ஆர்பிஐ நாட்டு வளர்ச்சி மற்றும் பணவாட்ட நிலையைச் சமாளிக்கக் கண்டிப்பாக வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளது.
தொழிற்துறை உற்பத்தி
இந்தியாவில் தொடர்ந்து வட்டி விகிதத்தைக் குறைத்தாலும், நாட்டின் தொழிற்துறை உற்பத்தி அளவீடு 3.5 சதவீதமாகவே உள்ளது. கடந்த வருடம் இதேகாலகட்டத்தில் இதன் ஆளவு 3.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம்
நாட்டின் மொத்த விலை பணவீக்கம் இந்திய -4.95 சதவீதமாகச் சரிந்தும், சிபிஐ எனப்படும் Consumer price index பணவீக்கம் 3.66 சதவீதமாக உள்ளது. கடந்த வருடம் இதன் அளவு 7.03 சதவீதம்.
செபி - எப்எம்சி இணைப்பு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
Home Loans, Auto Loans May Get Cheaper As RBI Cuts Interest Rates
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications