டெல்லி: இந்தியாவில் ஐபோன் விற்பனையை உயர்த்தப் பல வழிகளில் முயற்சி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் அக்டோபர்-டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சுமார் 12 லட்சம் மொபைல் போன்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இது கடந்த வருடம் முழுவதும் இந்தியாவில் விற்கப்பட்ட ஐபோன்களின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் 1 வருட வளர்ச்சியை மூன்றே மாத்தில் எட்ட கடுமையான இலக்கை வகுத்துள்ளது.
35 லட்சம் பொருட்கள்
இதன் மூலம் ஆப்பிள் நிறுவநம் 2015ஆம் ஆண்டில் 35 லட்ச சாதனங்களை விற்க உள்ளது. இந்த இலக்கை அடைய ஆப்பிள் நிறுவனம் இந்தியா முழுவதும் அதிகளவிலான விளம்பரங்களை செய்ய திட்டமிட்டுள்ளது.
விளம்பரத்திற்காக மட்டும் ரூ.300 கோடி
அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்நிறுவனம் விளம்பரத்திற்காக மட்டும் சுமார் 300 கோடி ரூபாய் வரை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
கடந்த வருடம் முழுவதும் வெறும் 120 கோடி ரூபாய் மட்டுமே இந்நிறுவனம் விளம்பரத்திற்காக செலவு செய்திருந்தது.
அக்டோபர் 16
வருகிற அக்டோபர் 16ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் போன்களை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.
அமெரிக்காவில் வெளியிட்ட 3 நாட்களில் சுமார் 1.3 கோடி போன்களை ஆப்பிள் விற்பனை செய்து ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய சரித்திரத்தை படைத்தது.
விலை என்ன..?
இந்நியாவில் வெளியிட உள்ள இந்நிறுவன தயாரிப்பகள் சுமார் 60,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
விழாக்காலம்
நிறுவனத்தின் விற்பனை இலக்கை எட்ட, இந்தியாவில் அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தொடர்ந்து வரும் விழாக்காலம் ஏதுவாக அமையும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications