டெல்லி: செப்டம்பர் மாத்தில் இந்திய தொழிற்துறை நிறுவனங்களின் உற்பத்தி 7 மாத சரிவை எட்டி 51.2 புள்ளிகளாகக் குறைந்துள்ளதாக நிக்கி இந்தியா ஆய்வுகள் தெரிவிக்கிறது.
சர்வதேச பொருளாதாகச் சூழ்நிலைகளின் காரணமாக இந்தியாவில் உற்பத்தித் துறை அதிகளவில் பாதிப்படைந்துள்ளது எனவும் நிக்கி இந்தியா நாட்டின் நிலையை விவரிக்கிறது.

நிக்கி இந்தியா செய்த ஆய்வில் இந்திய தொழிற்துறை நிறுவனங்களின் உற்பத்தி அளவு செப்டம்பர் மாதத்தில் 51.2 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் இதன் அளவு 52.3 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த அளவீடுகள் 50 புள்ளிகளுக்குக் குறைவாக இருந்தால் நாட்டின் உற்பத்தி அளவு வளர்ச்சி விகிதத்தில் உள்ளது என்பது பொருள்.

மேலும் ஏப்ரல் மாத காலாண்டை ஒப்பிடுகையில், ஜூலை மாத காலாண்டில் இந்தியாவின் உற்பத்தி அளவுகள் சிறப்பாக உள்ளது என மாக்கிட் நிறுவனத்தின் முக்கியப் பொருளாதார வல்லுநர் போலியானா டி லீமா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications