தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.. 4ஜி சேவைக்காக ஒன்றிணையும் அம்பானி பிரதர்ஸ்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் போட்டி மிகுந்து டெலிகாம் துறையில், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் தனது 4ஜி சேவையை 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் அறிமுகப்படுத்த, அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன உதவியை நாடியுள்ளது.

 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தன்வசம் உள்ள ஸ்பெக்டரத்தை ‘trading and sharing' முறையில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் 4ஜி சேவைக்காகப் பிகிர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை துவங்கியதாக அனில் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாத்திர கூட்டத்தில் அறிவித்தார்.

அனில் அம்பானி

அனில் அம்பானி

இந்திய டெலிகாம் துறையில் RJIO மற்றும் RCOM இணைந்து செயல்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் என் அண்ணனுடன் இணைவதில் மிகுந்த அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன் எனப் புதன்கிழமை நடந்த ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டத்தில் அனில் அம்பானி பேசினார்.

RJIO-RCOM ஸ்பெக்டரம் பங்கீடு..

RJIO-RCOM ஸ்பெக்டரம் பங்கீடு..

இந்த இணைப்பின் மூலம் ரிலையான்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன வாடிக்கையாளர்கள் RJIOவின் மேம்படுத்தப்பட்ட சேவை பெறுவார்கள்.

இதற்கு RJIO, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 800-850 மெகா ஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்.

வர்த்தகம் மற்றும் பங்கீடு

வர்த்தகம் மற்றும் பங்கீடு

மத்திய அரசு அடுத்தச் சில வாரங்களில் வெளியிட உள்ள வர்த்தகம் மற்றும் பங்கீடு எனப்படும் ‘trading and sharing' வழிமுறைகளைக் கொண்டு இந்த இணைப்பு நடக்க உள்ளதாகவும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்...
 

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்...

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர் கணக்கில் இந்தியாவில் 4வது மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாகும்.

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் 4ஜி சேவையை இந்தியாவில் அம்பானி பிரதர்ஸ் இருவரும் இணைந்து அறிமுகப்படுத்த உள்ளனர்.

மீண்டும் இணைப்பு..

மீண்டும் இணைப்பு..

பல வருடங்களுக்கு முன் அனில் மற்றும் முகேஷ் ஆம்பானி சில முக்கிய வர்த்தகத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டனர், ஆனால் அவரது தந்தை துருபாய் அம்பானியின் மறைவிற்குப் பின்னர் இருவரும் தனித்தனியாகவே தங்களது வர்த்தகம் மற்றும் தொழில்துறைகள் கவனித்து வருகின்றனர்.

போட்டி..

போட்டி..

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் 4ஜி சேவை அறிமுகப்படுத்தினால் இந்திய டெலிகாம் துறையில் மிகப்பெரிய போட்டி உருவாகும். குறிப்பாக ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்களால் அதிகளவில் லாபத்தைப் பெற முடியாது.

முதல் இடத்தை பிடித்தது இந்தியா..!

முதல் இடத்தை பிடித்தது இந்தியா..!

அமெரிக்கா, சீனா நாடுகளை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா..!

பாலியல் குற்றங்கள்

பாலியல் குற்றங்கள்

பாலியல் குற்றங்களில் சிக்கிக் கொண்ட இந்திய சீஇஓக்கள்..!

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RCom, Reliance Jio in talks for spectrum sharing

The once-warring Ambani brothers, Mukesh and Anil, have decided to come together to launch fourth-generation (4G) mobile phone services by the year-end, signalling a consolidation in the fragmented Indian telecom market.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X