டெல்லி: இந்திய சந்தையில் சில முக்கிய நிறுவனங்கள் தங்களின் லாப நோக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் நெய், வெண்ணெய் மற்றும் பட்டர் ஆயில் போன்றவற்றை அதிகளவில் இறக்குமதி செய்து வர்த்தகம் செய்து வருகின்றனர், இதனால் உள்நாட்டுச் சந்தையில் இதன் உற்பத்தியை மற்றும் வர்த்தகம் அதிகளவில் பாதித்து வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, உடனடி நடவடிக்கையாக நெய், வெண்ணெய் மற்றும் பட்டர் ஆயில் போன்றவற்றின் இறக்குமதி வரியை 10 சதவீதம் வரை தடலடியாக உயர்த்தியுள்ளது.
40 சதவீத இறக்குமதி வரி..
மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, நெய், வெண்ணெய் மற்றும் பட்டர் ஆயில் ஆகியவற்றின் இறக்குமதி வரியை 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்புகளை வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மார்ச் 31, 2016
இப்புதிய வரி விதிப்பு 2016ஆம் ஆண்டு மார்ச் 31 முதல் நடைமுறையில் இருக்கும் எனவும் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பால் மற்றும் அதன் சார்ந்த பொருட்கள்
சர்வதேச சந்சையில் பால் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் விற்பனை மற்றும் வர்த்தகர்கள் அதிகளவில் வெளிநாட்டுச் சந்தையை நாடத் துவங்கியுள்ளனர்.
இதனால் கூடிய விரைவில் இந்திய சந்தையில் இப்பொருட்களின் மீதான உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட உள்ளது. இதனைக் களையவே மத்திய அரசு இத்தகைய முடிவுகளை அறிவித்துள்ளது.
ஸ்டீல் மற்றும் எஃகு
இதேபோன்ற நடவடிக்கையை மத்திய அரசு ஸ்டீல் மற்றும் எஃகு பொருட்களின் இறக்குமதியில் அமல்படுத்தியது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications