டெல்லி: நாட்டின் முன்னணி மலிவு விலை பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அமிர்தசரஸ் மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் இருந்து துபாய்ச் செல்லும் பயணிகளுக்குக் குறுகிய கால அடிப்படையில் 4,999 ரூபாய் என்ற சலுகை கட்டணத்தை அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் அமிர்தசரஸ்-துபாய் மற்றும் கோழிக்கோடு-துபாய் ஆகிய புதிய வழித்தடங்களின் அறிமுகத்தைக் கொண்டாடும் வகையிலும், புதிய பயணிகளைக் கவரும் வகையிலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இத்தகையைச் சலுகையை அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நவம்பர் 15
திங்கட்கிழமை முதல் இச்சலுகையில் விமான டிக்கெடுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம், ஆனால் விமானப் பயணம் வருகிற நவம்பர் 15ஆம் தேதி முதல் துவங்கப்படுகிறது.
முக்கிய நகரங்கள்
இப்புதிய வழித்தடங்களின் அறிமுகத்திற்குப் பின் ஸ்பைஸ்ஜெட், டெல்லி, மும்பை, அகமதாபாத், புனே, கொச்சி, மதுரை, அமிர்தசரஸ் மற்றும் கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் இருந்து நேரடியாகத் துபாய்க்கு விமானத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
இதன்பின் இப்பட்டியலில் கொல்கத்தா, சென்னை, ஹதெரபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இச்சேவையை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
4,999 ரூபாய் மட்டுமே..
இப்பயணத்திற்கு அனைத்து வகையான வரி மற்றும் கட்டணங்களுடன் ஸ்பைஸ்ஜெட் 4,999 ரூபாய் மட்டுமே வசூல் செய்கிறது.
6 வெளிநாடுகள்..
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போதைய நிலையில் துபாய் உட்பட 6 வெளிநாடுகளுக்கு விமானச் சேவையை அளித்து வருகிறது. இதில் துபாய், பாங்காங், கொழும்பு, காபூல், மாலத்தீவு. மேலும் காத்மாண்டு-விற்கு இந்நிறுவன சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. முடங்கப்பட்ட இச்சேவையும் கூடிய விரைவில் செயல்படுத்த ஸ்பைஸ்ஜெட் திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications