டெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சியில் சேவைத் துறைக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்து ஒன்று. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் குறைவான தேவை மற்றும் கட்டண குறைப்பு ஆகியவற்றின் காரணமாக இத்துறையின் வளர்ச்சி குறைந்துள்ளதாக நிக்கி/மார்கெட் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் 51.8 புள்ளிகளாக இருந்து PMI குறியீடு (Purchasing Managers' Index) செப்டம்பர் மாதத்தில் 51.3 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.
கடந்த 3 மதகங்களாகத் தொடர்ந்து 50 புள்ளிகளுக்கும் அதிகமான உயர்வைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 வருடத்தில் குறைந்தபட்சமாக 49.5 புள்ளிகளைச் சேவைத்துறை எட்டி இருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 3.66சதவீதமாக உள்ளது. இதனைக் களைய ரிசர்வ் வங்கி யாரும் எதிர்பார்க்காத வகையில் ரெப்போ விகிதத்தில் 50 புள்ளிகள் குறைத்து 6.75 சதவீதமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் வட்டி விகிதம் குறைந்துள்ளதால், நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இதனால் அக்டோபர் மாதத்தில் இதன் அளவு கண்டிப்பாக 52 புள்ளிகளை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications