டெல்லி: இந்தியாவில் வெளிநாட்டிற்குச் சொல்லும் பயணிகளைக் கவர, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது விமானப் பயணிகள் சேவைக் கட்டணத்தை 30 சதவீதம் வரை குறைத்துள்ளது.
30% கட்டண சலுகை
இந்நிறுவனத்தின் அமெரிக்கா, ஐரோப்பா உட்பட அனைத்து வழித்தடங்களின் விமானக் கட்டணத்தைக் குறைந்த கால நடவடிக்கையாக 30% கட்டண சலுகையை ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ
இத்துறையில் சக போட்டி நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ முக்கியச் சலுகையை அறிவித்துள்ள நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இச்சலுகையின் மூலம் அதிக வாடிக்கையாளர்களைக் கவரும் என நம்பப்படுகிறது.
டிக்கெட் முன்பதிவு
30% கட்டண சலுகையில் அக்டோபர் 5 முதல் பயணிகள் தங்களது டிக்கெட்டை முன் பதிவு செய்துகொள்ளலாம் என ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
எதிஹாத் ஏர்வேஸ்
இந்நிலையில் ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமான எதிஹாத் ஏர்வேஸ் விமானங்களிலும் சில சலுகையைப் பயணிகள் பெறலாம் என ஜெட் ஏர்வேஸின் துணைத் தலைவர் கவ்ரங் ஷெட்டி தெரிவித்தார்.
24 சதவீத பங்குகள்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் எதிஹாத் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் 24 சதவீத பங்குகளில் முதலீடு செய்துள்ளது.
இதனால் இரு நிறுவனங்களின் கூட்டணியில் செயல்படும் 140 வழித்தடங்களிலும் விமானப் பயணிகள் தற்போது கட்டண சலுகையைப் பெறலாம்.
எதிஹாத் ஏர்வேஸ் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் மட்டும் அல்லாமல் ஏர் பெர்லின், அலிடாலியா, ஏர் செர்பியா மற்றும் ஏர் செஷல்ஸ் ஆகிய நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications