பெங்களூரு: உலகின் முன்னணி மென்பொருள் மற்றும் சேவை நிறுவனமான கேப்ஜெமினி, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐகேட் நிறுவனத்தைக் கைபற்றிச் சில மாதங்களில் இந்நிறுவனத்தின் சீஇஓ அசோக் வெமூரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பல உயர் அதிகாரிகளுள் அசோக் வெமூரி அவர்களும் ஒருவர். ஐகேட் நிறுவனத்தில் இணைந்து 2 வருடங்கள் முழுமையாக முடிந்த நிலையில் வெமூரியின் ராஜினாமா ஐடித்துறையில் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அசோக் வெமூரி
ஐகேட் நிறுவனம் கடுமையான சூழலில் சிக்கித்தவித்துக் கொண்டு இருக்கும் போது அசோக் வெமூரி இந்நிறுவனத்தில் சீஇஓவாக நியமிக்கப்பட்டார்.
நிறுவனத்தில் உள்ள பல முக்கியப் பிரச்சனைகளைக் குறைந்த காலத்தில் சரி செய்து ராயல் பாங்க் ஆஃப் கனடா மற்றும் ஜெனரல் எல்க்ட்ரிக் போன்ற மிகப்பெரிய வாடிக்கையாளர்களைப் பெற்றுக்கொடுத்தார்.
என்ன பிரச்சனை?
ஐகேட் மற்றும் கேப்ஜெமினி இணைக்கும் நடவடிக்கையில் நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை உட்படுத்த வேண்டிய சூழ்நிலையில் நிறுவனம் உள்ளதால் அசோக் வெமூரி நிறுவனத்தை விட்டு விலக வேண்டிய நிலையில் தள்ளப்பட்டார் எனச் செய்திகள் கிடைத்துள்ளது.
இதன் காரணமாகத் தான் ஐகேட் நிறுவனத்தின் டெவரி ஹெட் சியன் நாராயணனன் சில வாரங்களுக்கு முன் ராஜினாமா செய்தார்.
19 மில்லியன் டாலர்
ஐகேட் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அசோக் வெமூரி சுமார் 19 மில்லியன் டாலர் பணத்துடன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கேப்ஜெமினி கைப்பற்றுதலில் இவர் அதிகளவிலான தொகையைப் பெற்றுள்ளார்.
இடைக்காலச் சீஇஓ
அசோக் வெமூரி நிறுவனத்தை விட்டு வெளியேறிய நிலையில் ஐகேட் நிறுவனத்தின் இடைக்காலச் சீஇஓவாக இந்நிறுவனத்தின் நிதியியல் பிரிவின் தலைவர் சுஜித் சிர்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் கேப்ஜெமினி ஐகேட் நிறுவனத்தை 4 பில்லியன் டாலருக்கு கைபற்றியது.
உறுதி...
அசோக் வெமூரி அவர்களின் ராஜினாமா மற்றும் சுஜித் சிர்கார் அவர்களின் நியமனம் குறித்து ஐகேட் மற்றும் கேப்ஜெமினி ஆகிய இரு நிறுவனங்களும் உறுதியளித்துள்ளது.
இன்போசிஸ்
ஐகேட் நிறுவனத்திற்கு முன்பு அசோக் வெமூரி இன்போசிஸ் நிறுவனத்தில் 15 வருடம் பல முக்கியப் பதவிகளில் பணியாற்றியுள்ளார். இதில் இன்போசிஸ் நிறுவனத்தின் அமெரிக்க வர்த்தகத்திற்குத் தலைவராகவும், வங்கி மற்றும் நிதி சேவைகளுக்குத் தலைவராகும் இவர் பதவி வகித்துள்ளார்.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications