சிம்லா: உலகளவில் சில்லறை விற்பனையில் சிறந்து விளங்கும் வால்மார்ட் நிறுவனம் ஹிமாச்சல பிரதேசத்தில் 65 கோடி ரூபாய் முதலீட்டில் 5 கடைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக இம்மாநில அரசுடன் வால்மார்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஏற்கனவே இப்பகுதியில் வால்மார்ட் நிறுவனத்தின் கலக்ஷ்ன் சென்டர் இருந்தது, தற்போது இதன் வர்த்தகத்தை மேம்படுத்தும் வீதத்தில் 10 மில்லியன் டாலர் அளவில் அதாவது 65 கோடி ரூபாய் முதலீட்டில் 5 சில்லறை வர்த்தகக் கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

இதைதொடர்ந்து வால்மார்ட் சிம்லா, சோலன், மண்டி, ஹமிர்பூர் மற்றும் காங்க்ரா ஆகிய பகுதிகளிலும் தனது கிளைகளை விரிவாக்கம் செய்யவும் நிறுவவும் திட்டமிட்டுள்ளது.
மேலும் ஹிமாச்சல பிரதேசத்தில் புதிய கடைகளை நிறுவ இம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக வால்மார்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications