நோக்கியா: விடாமல் துரத்தும் வரிப் பிரச்சனை.. ரூ1,000 கோடி வரி நிலுவையைச் செலுத்த புதிய நோட்டீஸ்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நோக்கியா நிறுவனத்தின் இந்திய வர்த்தகம் மற்றும் உற்பத்தியில் செய்த வரி ஏய்ப்புகள் காரணமாக இந்நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி ஆலையை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது அனைவரும் அறிந்ததே.

 

இந்தப் பிரச்சனைக்கு இன்னும் ஒரு தீர்வு வராத நிலையில், வருமான வரித்துறை புதிதாக வரி நிலுவை நோட்டீஸை நோக்கியா இந்தியா நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது.

வரி நிலுவை பிரச்சனை

வரி நிலுவை பிரச்சனை

நோக்கியா நிறுவனம் செலுத்த வேண்டிய 2,080 கோடி ரூபாய் வரி நிலுவைத் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், வருமான வரித்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிதியாண்டுகளைத் தவிரப் பிற நிதியாண்டுக்கான வரி நிலுவையைச் செலுத்துமாறும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிள்ளது.

1000 கோடி ரூபாய்

1000 கோடி ரூபாய்

வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிதியாண்டுகள் அல்லாது பிற ஆண்டுகளில் நோக்கிய நிறுவனம் செலுத்த வேண்டிய 1,000 கோடி ரூபாய் வரியைக் கோரி வருமான வரித்துறை நோடீஸ் அனுப்பியுள்ளது.

நடவடிக்கை

நடவடிக்கை

இப்போது எவ்வளவு வரி நிலுவை என்பது குறித்தோ அல்லது நோக்கியா நிறுவனம் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தோ வருமான வரித்துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

நோக்கிய
 

நோக்கிய

2,080 கோடி ரூபாய் வரி பிரச்சனையை நோக்கிய நிறுவனம் சுமுகமாக முடித்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தொழிற்சாலையை விற்பதில் கிடைக்கும் பணத்தை அரசு மற்றும் நோக்கியாவிற்குப் பொதுக்கணக்கில் வைப்பு வைக்கப்பட்டு.

வரி நிலுவை போக மீதமுள்ள பணத்தைக் கொடுத்தால் மட்டும் போதும் என நோக்கிய தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்த பிரச்சனை

அடுத்தடுத்த பிரச்சனை

2006-ம் ஆண்டிலிருந்து வரி செலுத்தவில்லை என்பதற்காக ரூ. 2,080 கோடி வரி பாக்கிக்கான நோட் டீஸை வரித்துறையினர் 2013-ம் ஆண்டு அனுப்பினர். வரிச் சிக்கலில் உள்ள சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையை மட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

I-T dept slaps fresh tax notice on Nokia India

The income tax department has issued a fresh tax demand to Nokia India on grounds similar to a previous claim but for different assessment years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X