டெல்லி: உலகின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் மீது வருமான வரித்துறை விதித்த ரூ.8,500 கோடி வரி நிலுவை தீர்ப்பாயத்தை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னதாக 2007-ம் ஆண்டு அகமதாபாதில் உள்ள கால் சென்டர் பங்குகளை விற்பனை செய்தது தொடர்பாக 8,500 கோடி ரூபாய் தொகையைப் பங்கு பரிமாற்ற கட்டணமாகச் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை வோடபோன் நிறுவனத்திற்கு அறிக்கைவிடுத்தது.

இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.சி. தர்மாதிகாரி, ஏ.கே. மேனன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்தப் பரிவர்த்தனையில் வரி செலுத்த தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக இனி இந்தியாவில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் துணிச்சலுடன் தொழில் தொடங்க முன்வரும் என்று வோடபோன் நிறுவனத்துக்கு ஆதரவாக வாதாடிய டிஎம்டி எனும் சட்ட நிறுவனத்தின் மூத்த பங்குதாரர் பெரெஷ்தே சேத்னா கூறினார்.


Click it and Unblock the Notifications