டெல்லி: இந்திய தொழிற்சாலைகளின் உற்பத்தி அளவுகள் (IIP) கடந்த சில மாதங்களாகக் குறைவாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 3 வருட உயர்வை எட்டி 6.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தத் திடீர் வளர்ச்சிக்கு உற்பத்தித் துறையும், சுரங்க துறையும் மிகவும் உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம்
செப்டம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் சில புள்ளிகள் உயர்ந்தாலும், கொள்கை வகுப்பாளர்களுக்கு ஏற்ற வகையில் நிலையான அளவுகளிலேயே உள்ளது.
ஆசிய சந்தை..
மந்தமான வளர்ச்சியில் உள்ள சர்வதேச பொருளாதாரச் சந்தையில் இந்தியாவில் தொழிற்சாலை உற்பத்தி அளவு ஆசிய சந்தையில் புதிய உந்து சக்தியை உருவாக்கியுள்ளது.
வளர்ச்சி விகிதம்
மத்திய அரசின் சில திட்ட ஒப்புதல்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித தளர்வுகள் மூலம் நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் சுமார் 7.5 - 8 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய புள்ளியியல் அலுவலகம்
திங்கட்கிழமை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஆகஸ்ட் மாதத்தில் தொழிற்சாலை உற்பத்தி அளவு 6.4 சதவீதமாக உள்ளது என அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் இதன் அளவு 4.1 சதவீமாகவும் இருப்பதாக அறிவித்துள்ளது.
2012 அக்டோபர் மாதம் இதன் அளவு 8.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி
ஆகஸ்ட் மாதத்தில் சுரங்கத் துறை 3.8 சதவீதமாகவும், உற்பத்தித்துறை 6.89 சதவீதமாகவும், மின்சாரத் துறை 5.6 சதவீதமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இக்காலகட்டத்தில் ஒட்டுமொத்த தொழிற்சாலை உற்பத்தி அளவுகள் 6.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications