தொடர்ந்து சொதப்பும் பிளிப்கார்ட்.. பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் தொழில்நுட்ப கோளாறு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: தள்ளுபடி விற்பனை என்ற பெயரில் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் செய்யும் அலம்பல் சொல்லி மாளாது. விழாக்காலத்தை முன்னிட்டு இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் என 5 நாள் புதிய தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.

 

இந்த விற்பனை இன்று காலை துவங்கி சில மணிநேரங்களிலேயே மொபைல் தளங்கள் முடங்கிய வாடிக்கையாளர்களுக்கு முந்தைய பிக் பில்லியன் டே விற்பனையை நினைவிற்குக் கொண்டு வந்தது.

இதனால் சமுக வலைத்தளங்களில் மக்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தைப் பற்றித் தாறுமாறாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த முறையும் அனைத்து வாடிக்கையாளர்களுக்குப் பிளிப்கார்ட் நிறுவன தலைவர்களிடம் இருந்து மன்னிப்புக் கடிதம் கிடைக்குமா..?

தொழில்நுட்ப கோளாறு..

தொழில்நுட்ப கோளாறு..

கடந்த பிக் பில்லியன் டேவில் நடந்தது போலவே இம்முறையும், அதிகளவிலான வாடிக்கையாளர்களைச் சமாளிக்க முடியாமல் பிளிப்கார்டின் மொபைல் தளம் முடங்கியது.

ஒன்இந்தியா தளத்தின் டெக்னாலஜி செய்தி பிரிவான கிஸ்பாட் பிளிப்கார்ட் மொபைல் தளத்தை அணுகும் போது கூட "503 Service Unavailable" எனக் காட்டியது.

இயல்பு நிலை..

இயல்பு நிலை..

அடுத்தச் சில நிமிடங்களில் மீண்டும் பிளிப்கார்ட்டின் மொபைல் தளத்தை அணுகும் போது தளம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

விலை மதிப்பு..

விலை மதிப்பு..

சமுக வலைத்தளங்களில் சில வாடிக்கையாளர் தெரிவித்துள்ள கருத்துக்களின் படி, பிளிப்கார்ட் விற்பனை தளத்தில் பொருட்களின் விலையைக் கூட்டி தற்போது பழைய விலைக்குத் தள்ளுபடி விற்பனை என்ற பெயரில் விற்பனை செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

5 நாட்கள்
 

5 நாட்கள்

அக்டோபர் 13 முதல் 17ஆம் தேதி வரையில் செய்யப்படும் இந்தப் பிக் பில்லியன் டேஸ் விற்பனை பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொபைல் தளம் சார்ந்த விற்பனையைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும் என அறியப்பட்டாலும், வாடிக்கையாளர் மத்தியில் இதற்கு அதிகளவிலான வரவேற்பு கிடைக்கவிவ்லை என்பதே நிதர்சனமான உண்மை.

மொபைல் தளம்

மொபைல் தளம்

இந்தத் தள்ளுபடி விற்பனையைப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொபைல் ஆப் மூலம் மட்டுமே வாடிக்கையாளர் பெற முடியும்.

மொபைல் தள வாடிக்கையாளர்கள் அதிகளவில் பெறுவதற்கு இது வழி.

மிந்திரா

மிந்திரா

இதேபோன்ற தள்ளுபடி விற்பனை பிளிப்கார்டின் கிளை நிறுவனமான மிந்திரா மொபைல் தளத்திலும் நடைபெறுகிறது.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

பிளிப்கார்ட் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ஸ்னாப்டீல் திங்கட்கிழமை எல்க்ட்ரானிக் பொருட்களுக்கான சிறப்புத் தள்ளபடி விற்பனையை நேற்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பிக் பில்லியன் டேஸ்

பிக் பில்லியன் டேஸ்

10 மணிநேரத்தில் 10 லட்சம் பொருட்கள் விற்பனை: பிக் பில்லியன் டேஸ்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart Big Billion Days: New Sale, Same Problems?

Flipkart Big Billion Days Sale seemed to get off to a rocky start Tuesday midnight, as the e-commerce giant's website and app looked to be struggling to cope up with the heavy traffic, a scenario that was reminiscent of last year's Big Billion Sale.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X