மும்பை: பொதுவாக இந்திய பங்குச் சந்தையில் விமான நிறுவனங்கள் மீதான முதலீடு மிகவும் குறைவாகவே இருக்கும், இதற்கு முக்கியக் காரணம் இந்திய விமான நிறுவனங்களின் செயல்பாடு தான். குறிப்பாகத் தனியார் விமான நிறுவனங்கள் மீதான முதலீடு எப்போதும் கத்தி மேல் நடப்பது போன்றே இருக்கும்.
உதாரணமாகக் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தவர்களின் நிலையை யோசித்துப்பாருங்கள். இத்தகைய நிலை தற்போது இண்டிகோ நிறுவனத்தால் முழுமையாக மாற உள்ளது என்றே சொல்லலாம்.
இண்டிகோ
இந்திய விமானப் போக்குவரத்தில் அதிகப் பங்கு மதிப்புடைய இண்டிகோ நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படத் திட்டமிட்டுள்ளதால் இத்துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான உயர்வைச் சந்தித்து வருகிறது.
இண்டிகோ நிறுவனத்தின் வர்த்தகம் கடந்த பல வருடங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிறப்பான லாபத்தை அடையும் என முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாக இத்துறை நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வைச் சந்திக்கிறது.
ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மட்டும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 20 சதவீதமும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 12.3 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 4.16 சதவீதம் உயர்ந்து 38.85 ரூபாய்க்கும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1.33 சதவீதம் மட்டுமே சரிந்து 364.85 ரூபாய்க்கு இந்நிறுவனப் பங்குகள் வர்த்தகம் செய்யப்படுகிறது.
எச்சரிக்கை
இந்த நிலையில் சில்லறை முதலீட்டாளர்கள் இத்துறை பங்குகள் மீது முதலீடு செய்வது ஆபத்தானது எனப் பங்குச்சந்தை முதலீட்டு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
29 மாத உயர்வு
நேற்றைய வர்த்தகத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சுமார் 20 சதவீதம் வரை உயர்ந்து 29 மாத உயர்வைப் பதிவு செய்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 60 சதவீதம் வரை இந்நிறுவனப் பங்குகள் உயர்ந்துள்ளதாக இந்நிறுவன தலைவர் அஜய் சிங் தெரிவித்தார்.
மதிப்பீடு
இம்மாத இறுதியில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் இண்டிகோ நிறுவனம் 25,000 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஸ்பைஸ்ஜெட் வெறும் 2,000 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை
இன்றைய நிலையில் இண்டிகோ நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டால் சிறப்பான முதலீட்டையும், வர்த்தகத்தையும் பெறும் என்பது உறுதியான நிலையில். இத்துறை சார்ந்த நிறுவனங்களும் சிறப்பான வர்த்தகத்தைப் பெறும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications