பெங்களூரு: இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் ஐடித்துறையில், மென்பொருள் ஏற்றுமதியிலும், பணியாளர் எண்ணிக்கையிலும் முதல் இடத்தைப் பிடித்துள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 2015ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் சந்தை கணிப்புகளைத் தவறவிட்டு குறைவான லாபத்தைப் பெற்றுள்ளது.
என்ன காரணம்..?
சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பீடுகளால் இந்நிறுவனத்தின் லாப அளவுகள் அதிகளவில் குறைந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் டெலிகாம் மற்றும் எனர்ஜி பிரிவுகளின் வருவாய் அதிகளவு குறைந்துள்ளது.
மேலும் பிரட்டனில் உள்ள பிபீஓ கிளையான டிலிஜென்டா நிறுவனத்தின் செயல்பாடும் குறைந்து மந்தமான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
இதனால் இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனத்தின் 12 மாத வருவாய் கணிப்புகள் தற்போது பொய்யாகியுள்ளது.
லாப அளவுகள் சரிவு
நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் இந்நிறுவனத்தின் லாப அளவுகள் 16 சதவீதம் உயர்த்தாலும், கடந்த சில காலாண்டுகளை ஒப்பிடும் போது தற்போது குறைவான லாபத்தையே டிசிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
டாலர் வருவாய்
டாலர் வருவாய் அளவுகளைப் பார்க்கும் போது டிசம்பர் 2014ஆம் ஆண்டு 3 வருட லாப உயர்வைப் பதிவு செய்து 2,077 மில்லியன் டாலராக இருந்தது. ஆனால் தற்போது செப்டம்பர் மாதத்தில் 10 காலாண்டு சரிவான 1,459 மில்லியன் டாலரைப் பெற்றுள்ளது.
வளர்ச்சி பாதையில் இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனத்தைப் பார்க்கும் போது டாலர் வருவாய் வெறும் 499 மில்லியன் டாலராக இருந்தாலும், ஜூன் காலாண்டில் இதன் அளவு 443 மில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. இதனால் இன்போசிஸ் நிறுவனம் வளர்ச்சி பாதையில் உள்ளதைத் தெளிவாகத் தெரிவிக்கிறது.
முதலீட்டு மதிப்பீடு
டிசிஎஸ் நிறுவனத்தின் மீதான லாப அளவுகளை வைத்து முதலீட்டு வாய்ப்புகளைக் கணிக்கும் போது, குறைந்த காலக் கட்ட முதலீட்டுக்கு லாபம் குறைவாக இருந்தாலும் நீண்ட காலக் கண்ணோட்டத்தில் டிசிஎஸ் நிறுவனம் ஏஓன் சாய்ஸ்.
வாடிக்கையாளர் எண்ணிக்கை
இக்காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் சுமார் 174 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது, இதில் 100 மில்லியன் டாலர் திட்டத்தில் 3 வாடிக்கையாளரும், 20 மில்லியன் டாலர் திட்டங்களில் 171 வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது.
இரண்டு மடங்கு அதிக லாபத்தில் 'டிசிஎஸ்'..!
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications