இந்திய பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உருவாகும் மொத்த விலை பணவீக்கம்..!

டெல்லி: இந்திய பொருளாதாரத்திற்கு நுகர்வோர் பணவீக்கத்தின் மூலம் பல நன்மைகள் கிடைத்தாலும், மொத்த விலை குறியீட்டின் பணவாட்ட நிலையின் மூலம் பல ஆபத்துக்கள் காத்துக்கிடக்கிறது.

ஆகஸ்ட் மாதத்திற்கான மொத்த விலை குறியீடு (WPI) கடந்த 10 மாத காலமாகத் தொடர்ந்து பணவாட்ட நிலையிலேயே உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இதன் அளவு -4.95 வரை சரிந்து இந்திய சந்தையைப் பதம் பார்த்து வருகிறது. ஜூலை மாதத்தில் இதன் அளவு 4.05 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேகாலகட்டத்தில் நுகர்வோர் விலை பணவீக்கத்தின் அளவு 3.69 சதவீத அளவில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் 3.66 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அரவிந்த் சுப்பிரமணியன்

அரவிந்த் சுப்பிரமணியன்

இதே நிலை தொடர்ந்தால் இந்திய பொருளாதாரம் சர்வதேச அளவில் பணவாட்ட சந்தையாக உருமாறும், இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாகும் என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

இந்திய சந்தை

இந்திய சந்தை

நுகர்வோர் விலை பணவீக்கத்தின் சரிவினால் இந்திய சந்தை மற்றும் நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ச்சியைச் சந்தித்தாலும், பணவாட்ட நிலை இந்த வளர்ச்சியைத் தடுத்த நிறுத்துவதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பணவாட்ட நிலை

பணவாட்ட நிலை

இந்திய சந்தையில் ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி பொருளுக்கான பணவீக்கம் -1.92 (பணவாட்டம்) சதவீதமாக உள்ளது. அதேபோல் எரிபொருள் மற்றும் பவர் துறையின் பணவாட்டம் 16.50%, உணவுப் பொருட்கள் -1.13 சதவீதமாகவும், முக்கியப் பொருட்கள் -3.71% ஆக உள்ளது.

பணவாட்டம் என்றால் என்ன?

பணவாட்டம் என்றால் என்ன?

பணவீக்கம் மற்றும் பணவாட்ட நிலையைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இதைக் கிளீக் செய்யவும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+