பெங்களூரு: ஈகாமர்ஸ் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனை இந்தியா முழுவதும் சூடுபிடித்துள்ள நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் 3வது நாளில் ஒரு நிமிடத்திற்குச் சராசரியாக 840 மொபைல்களை விற்பனை செய்து இந்திய சந்தையில் புதிய சாதனை படைத்துள்ளது.
5 லட்சம் மொபைல்
இந்த விற்பனை குறித்த பிளிப்கார்ட் நிறுவனம் கூறுகையில், கடந்த 10 மணிநேரத்தில் சுமார் 5 லட்சம் மொபைல்களை இந்தப் பிக் பில்லியன் டே விற்பனையில் விற்பனை செய்துள்ளோம்.
இத்தகைய குறுகிய காலகட்டத்தில் அதிகளவில் மொபைல்களை விற்பனை செய்தது பிளிப்கார்ட் தான் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிக் பில்லியன் டேஸ்
அக்டோபர் 13 ஆம் தேதி துவங்கப்பட்டு 17ஆம் தேதி வரை நடைபெறும் பிக் பில்லியன் டேஸ் தள்ளுபடி விற்பனையில், வியாழக்கிழமை நள்ளிரவில் மொபைல்களுக்கான சலுகை அறிவிக்கப்பட்டது.
முக்கிய நகரங்கள்
வழக்கம் போல் பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பையில் விற்பனை அதிகளவில் இருந்தாலும், நாக்பூர், இந்தோர், கோயம்புத்தூர், விசாகப்பட்டினம் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 2ஆம் தர நகரங்களில் இருந்தும் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் வர்த்தகம் செய்தனர் எனப் பிளிப்கார்ட் நிறுவனம் தெகிவித்துள்ளது.
4ஜி வாடிக்கையாளர்
பெங்களூரு சேர்ந்த ஒரு நிறுவனம் செய்த ஆய்வில், பிளிப்கார்ட் நிறுவனத்தில் வர்த்தகம் செய்த பெரும்பாலானோர் 4ஜி இணைப்புக் கொண்ட மொபைல்களில் வர்த்தகம் செய்ததாகவும், விற்பனை செய்யப்பட்ட 5 இலட்சம் மொபைல்களில் 75 சதவீதம் 4ஜி வசதி கொண்ட மொபைல்கள் எனத் தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் 4ஜி சேவைக்கான வர்த்தகம் தொடர்ந்து உயர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நொடிக்கு 25 பொருட்கள் விற்பனை
இந்நிறுவனத்தின் முதல் நாள் விற்பனையில் முதல் 10 மணிநேரத்தில் 10 லட்சம் பொருட்கள் விற்பனை செய்து கலக்கியுள்ளது பிளிப்கார்ட். இந்தியா முழுவதும் சுமார் 6 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு ஒரு நொடிக்கு 25 பொருட்களைப் பிளிப்கார்ட் விற்பனை செய்து ஈகாமர்ஸ் சந்தையை அசத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications