டெல்லி: இந்தியாவில் பருப்பு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வரும் நிலையில், துவரம் பருப்பு ஓரு கிலோ 190 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையைச் சரிசெய்ய விலை நிலைப்பாட்டு நிதியைப் பயன்படுத்தவும், அதிகளவில் பருப்பு வகைகளை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பருப்புகளைக் கொண்டு, கூடுதல் இருப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் விநியோகத்தில் தட்டுப்பாடு இருக்காது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அருண் ஜேட்லி
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், இந்தியாவில் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு சுமார் 190 வரை வரை உயர்ந்துள்ளது.
இந்நிலையைச் சரிசெய்ய மத்திய அரசு, சுமார் 500 கோடி ரூபாய் விலை நிலைப்பாட்டு நிதியை, பருப்புகளின் இறக்குமதி கட்டணங்கள், போக்குவரத்து, கையாளுதல், அரைத்தல் மற்றும் பதப்படுத்தல் ஆகிய பணிகளுக்குப் பயன்படுத்திப் பருப்பு விலைகளை உடனடியாகக் குறைக்கும் வேலைகளில் மத்திய அரசு இறங்க உள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்தார்.
விலை கட்டுப்பாட்டு நிதி
கடந்த மார்ச் 27ஆம் தேதி விவசாயம் மற்றும் கூட்டுறவு துறை, விவசாயப் பொருட்களின் விலை நிலைகளைக் கட்டுப்படுத்த சுமார் 500 கோடி ரூபாய் நிதியை விலை கட்டுப்பாட்டு நிதியாக ஒதுக்கியது. இதனை மத்திய மற்றும் மாநில அரசுகள் வட்டியில்லாக் கடனாகப் பெறலாம் எனவும் விவசாயம் மற்றும் கூட்டுறவு துறை தெரிவித்திருந்தது.
இதனைப் பயன்படுத்தித் தான் மத்திய அரசு தற்போது இந்தியாவில் பருப்பு விலையைக் குறைக்க உள்ளது.
மாநில அரசுகள்
அதேபோல் மாநில அரசுகள் துறைமுகங்களில் இருக்கும் பருப்பு இருப்புகளை உடனடியாகச் சந்தைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது எனவும் அவர் கூறினார். குறிப்பாக மும்பை அருகில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் அதிகளவிலான பருப்பு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விலை குறைப்பு
மத்திய அரசின் விலை நிலைப்பாட்டு நிதி பயன்பாடு மற்றும் துறைமுகத்தில் உள்ள இருப்பைச் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் துவரம் பருப்பு மற்றும் பிற பருப்பு வகைகளின் பற்றாக்குறை மற்றும் விலை நிலைகள் குறையும் என ஜேட்லி தெரிவித்தார்.
விநியோக தட்டுப்பாடு
எதிர் வரும் நாட்களில் பருப்பு வகைகளின் விநியோக தட்டுப்பாட்டைத் தீர்க்க மத்திய அரசு அதிகளவில் இறக்குமதி செய்து, கூடுதல் இருப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இறக்குமதி
தற்போது கூடுதலாக 2,000 டன் பருப்பு இறக்குமதி செய்வதன் மூலம் நாட்டில் உடனடியாக விலை நிலைகளைக் குறைக்க முடியும்.
இவை ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட 5,000 டன் பருப்புகள் துறைமுகங்களில் உள்ள நிலையில், 2,000 இறக்குமதி செய்யப்பட்டுப் பயணத்தில் உள்ளது.
500 கோடி ரூபாய்
மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள 500 கோடி ரூபாய் மதிப்புள்ள விலை நிலைப்பாட்டு நிதியை, பருப்புகளின் இறக்குமதி கட்டணங்கள், போக்குவரத்து, கையாளுதல், அரைத்தல் மற்றும் பதப்படுத்தல் ஆகிய பணிகளுக்குப் பயன்படுத்த உள்ளது. இதனால் பருப்பு விலைகளை உடனடியாகக் குறையும்.
முக்கியச் சந்திப்பு
பருப்பு நிலைகள் குறித்து அருண் ஜேட்லி வியாழக்கிழமை வர்த்தகத்துக்கறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, போக்குவரத்துறை அமைச்சர் நித்தின் கட்கரி உட்படப் பல உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications