டெல்லி: கால் டிராப் பிரச்சனையை சந்திக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் இனி 1 ரூபாய் செலுத்த வேண்டும் என டெலிகாம் துறையின் கட்டுப்பாட்டு அணையமான டீராய் முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், இத்துறையின் முக்கிய அதிகாரிகள் டிராய் அமைப்பின் புதிய தீர்மானத்தை குறித்து தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளுக்கு 3 ரூபாய்..
ஒரு கால் டிராப்பிற்கு 1 ரூபாய் வீதம் 1 நாளில் 3 ரூபாய் வரை செலுத்த தொலைதொடர்பு நிறுவனத்திற்கு அனுமதி உண்டு. மூன்று முறைக்கு மேல் கால் டிராப் சந்திக்கும் வாடிக்கையாளரின் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டிராய் அமைப்பு முடிவு செய்துள்ளது.
பீதியில் தொலைதொடர்பு நிறுவனங்கள்
இத்தீர்மானம் நடைமுறைக்கு வந்தால், வாடிக்கையாளர் அதிகளவில் லாபம் அடைவார்கள், இதனால் தொலைதொடர்பு நிறுவனங்களின் கஜானா காலி ஆகவும் வாய்ப்பு உள்ளது.
இப்பிரச்சனையை தீர்க்க ஓரே வழி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது சேவை மற்றும் நெட்வொர்க் தரத்தை உயர்ந்து கால் டிராப் பிரச்சனையை தவிர்க வேண்டும்.
நீதிமன்றம்
டிராய் அமைப்பின் இந்த தீர்மானத்தை எதிர்த்து நாட்டின் முன்னணி நிறுவனங்களான வோடபோன், ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தயாராக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
டெல்லி மற்றும் மும்பை..
டிராய் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் தொலைதொடர்பு வாடிக்கையாளர்கள் டெல்லி மற்றும் மும்பை பகுதிகளில் அதிகளலிலான கால் டிராப் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளது.
செகண்ட்ஸ் பேமென்ட்
கடந்த சில வாரங்கள் முன்பே டிராய் அமைப்பு அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் இனி வாடிக்கையாளர்களிடம் நெடிக்கணக்கில் கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் கால் டிராப் பிரச்சனைக்கு 1 ரூபாய் அபராதம் என்பது மிகவும் அதிகம் எனவும் டெலிகாம் நிறுவனங்கள் கூறுகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications