பெங்களூரு: இந்தியாவில் ஷாப்பிங் அனுபவத்தை நம் வீட்டின் கம்பியூட்டரிலும் மொபைலிலும் அளித்த பிளிப்கார்ட் நிறுவன தலைவர்கள் தற்போது உங்கள் வீட்டுக் கதவையும் தட்ட உள்ளார்.
ஈகாமர்ஸ் நிறுவனங்கள் அதிகளவிலான தள்ளுபடிகளை அளித்து விற்பனையில் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் தனது 8 ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, இந்நிறுவன தலைவர் பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் ஆகியோர் டெலிவரி பாய் ஆக மாறி வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகப் பொருட்களை டெலிவரி செய்து வருகின்றனர்.
டெலிவரி வித் செல்ஃபி
பிக் பில்லியன் டேஸ் தள்ளுபடி விற்பனையில் ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் பணியில் பிளிப்கார்ட் துவங்கியுள்ள நிலையில், இந்நிறுவன தலைவர்கள் பெங்களூரில் உள்ள சில வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகச் சென்று பொருட்களை டெலிவரி செய்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் அனைத்து வாடிக்கையாளர்களுடனும் செல்ஃபி எடுத்துள்ளனர்.
15 முதல் 20 நாட்கள்
இப்பணியைச் சச்சின் மற்றும் பின்னி பன்சால் மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் இப்பணியில் ஈடுபட உள்ளதாகவும் பின்னி பன்சால் தெரிவித்துள்ளார்.
இது விளம்பரம் இல்லை வியாபாரம்..
ஒரு நிறுவன தலைவர் எதற்காக டெலிவரி செய்ய வேண்டும்..? இவை அனைத்தும் வியாபாரமே.
ஈகாமர்ஸ் துறையில் தற்போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை லாஜிஸ்டிக்ஸ், இப்பிரச்சனைகளைக் களைய எளிய வழிமுறைகளைக் கண்டறியும் விதமாக இந்த டெலிவரி செய்கின்றனர்.
அதுமட்டும் அல்லாமல் சந்தையை நேரடியாகக் காணும் வாய்ப்பாகவும் அது அமையும்.
பழச மற்றக்கமாட்டோம்...
8 வருடத்திற்கு முன் இதே பெங்களூரு சாலையில் புத்தகங்களை டெலிவரி செய்வதற்காகப் பைக்குகளில் நாங்கள் சுற்றித் திரிந்துள்ளோம். இந்த டெலிவரி எங்களுக்குப் பழைய ஞாபகங்களை நினைவிற்குக் கொண்டு வருகிறது என்று பின்னி பன்சால் தெரிவித்துள்ளார்.
15 பில்லியன் டாலர்
கடந்த 8 வருடத்தில் இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 15 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து, இந்தியாவில் சிறந்த ஈகாமர்ஸ் தளம் என்ற பெயரை பெற்றுள்ளது.
போர்ப்ஸ் பத்திரிக்கை..
இன்று டெலிவரி பாய் ஆக இயங்கும் சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் போர்ப்ஸ் பத்திரிக்கையின் இந்தியாவில் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றளவர்கள்.
முதல் டெலிவரி
பிளிப்கார்ட் நிறுவனம் துவங்கிய போது, வெறும் புத்தகங்களை மட்டுமே விற்பனை செய்து வந்தது.
சச்சின் மற்றும் பின்னி பன்சால் அவர்களின் முதல் டெலிவரி அனுபவத்தை பார்க்க வேண்டுமா..? இதைக் கிளீக் செய்யுங்கள்
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications