மும்பை: இந்தியாவில் ஆன்லைன் விற்பனை விண்ணை மூட்டும் நிலையில் மின்திரா, ஜபாங் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்குப் போட்டியாக ஆதித்யா பிர்லா குழுமம் தனது புதிய பேஷன் ஆன்லைன் விற்பனை தளத்தை அமைத்துள்ளது.
இப்புதிய தளத்தின் பெயர் ABOF.COM, இளைஞர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த இணைய விற்பனை தளத்தில் ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் 55 பிராண்டு பொருட்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்ய ஏதுவாக வடிவமைத்துள்ளது.

இதில் பேஷன் நகைகள், காலணிகள் மற்றும் ஹேண்ட்பேக்களை ABOF தளம் விற்கத் திட்டமிட்டுள்ளது.
மேலும் இத்தளத்தின் முக்கிய நோக்கமாக, ஈகாமர்ஸ் சந்தையில் தற்போது இருக்கும் நிலையைக் குறிப்பாகத் தள்ளுபடி, சலுகை போன்றவற்றை மாற்றி மேம்பட்ட டிசைன் மற்றும் தரம்வாய்ந்த பொருட்களை விற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டுக்குள் இத்தளத்தின் விற்பனை அளவு 35 பில்லியன் டாலரை எட்டும் என் கூகுள் நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
மேலும் இந்திய பேஷன் ஆன்லைன் விற்பனை சந்தையில் 35 சதவீத சந்தையை ABOF நிறுவனம் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications