மும்பை: சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சுமார் 12.5 சதவீத லாப உயர்வைச் சந்தித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2015ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் 12.5 சதவீத லாப உயர்வில் 6,720 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் விற்பனை 34 சதவீதம் குறைந்து 5,972 கோடி ரூபாய் லாபத்தை மட்டும் பெற்றிருந்தது.
கச்சா எண்ணெய்
இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் விற்பனை அளவு 1,13,396 கோடி ரூபாயில் இருந்து 75,117 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகளவில் குறைந்தது தான்.
50.6 சதவீதம் விலை குறைவு
இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் கூறுகையில், கடந்த வருடத்தை ஒப்பிடும் போது கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 50.6 சதவீதம் வரை குறைந்துள்ளது இதனால் நிறுவனத்தின் வருவாய் அளவு அதிகளவில் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வருவாய்
இந்நிலையில் செப்டமர் 30ஆம் தேதி வரையில் முடிந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.70,901 கோடியாகவும், செலவீணம் ரூ.63,368 கோடியாகவும் உள்ளதாக அறிவித்துள்ளது.
லாபம்
இக்காலகட்டத்தில் வரிக்கு முந்தைய லாபமாக 8409 கோடியாகவும், மொத்த லாபமாக 6,720 கோடியாகவும் உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications