1,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய டாடா ஸ்டீல் முடிவு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன்: சந்தை மதிப்பில் முன்னணி நிறுவனமான விளங்கும் டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பிரட்டன் தொழிற்சாலையில் அடுத்த வாரம் சுமார் 1000 ஊழியர்களைப் பணி நீக்கச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

1,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய டாடா ஸ்டீல் முடிவு..!

டாடா ஸ்டீல் ஸ்கன்திரோப் ஸ்டீல்வொர்க்ஸ் தொழிற்சாலையில் நிர்வாகம் மற்றும் நிதிநிலை மேம்பாட்டிற்காக இந்நிறுவனத்தில் 1,000த்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தி கார்டியன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சில பத்திரிக்கைகள் இந்த எண்ணிக்கையை 1200 ஆகவும் குறிப்பிட்டுள்ளது.

பிரட்டன் ஸ்டீல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் சில நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளைத் தற்காலிகமாக முடக்கியும், பல நிறுவனங்கள் பணியாளர்களைத் தொடர்ந்து வெளியேறி வருகிறது. இப்பிரச்சனையில் பிரட்டன் அரசு தலையீட்டு சரி செய்ய வேண்டும் எனக் கம்யூனிட்டி யூனியன் தலைமை செயலாளர் ராய் ரிக்ஹஸ் தெரிவித்துள்ளார்.

1,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய டாடா ஸ்டீல் முடிவு..!

பிரட்டனில் ஸ்டீல் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்துப் பிரட்டன் அரசிடம் பேசி வருவதாக டாடா ஸ்டீல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்த பல முயற்சிகளைச் செய்த பின் தான் ஊழியர்கள் பணி நீக்க முடிவுக்கு வந்ததாக டாடா ஸ்டீல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Steel seen axing 1,000 jobs at UK plant next week

Tata Steel is expected to axe around 1,000 jobs next week in the UK, according to reports in the British media.
Story first published: Saturday, October 17, 2015, 15:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X