பெங்களூரு: அமெரிக்கா ஹூஸ்டன் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நோஹா கன்சல்டிங் நிறுவனத்தை நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் 70 மில்லியன் டாலர் தொகைக்கு வெற்றிகரமாகக் கைப்பற்றியுள்ளது.
நோஹா கன்சல்டிங் நிறுவனம்
கடந்த 2008ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைக்குப் பிரத்தியேகமாகத் தகவல் தொழில்நுட்ப சேவையை அளித்து வருகிறது.
இன்போசிஸ் தற்போது வங்கி மற்றும் பிற முக்கியத் துறைகளில் மட்டும் அல்லாது, ரோபோடிங்கஸ், பிக் டேட்டா அனலிசிஸ் போன்ற புதிய துறைகளிலும் கால்தடம் பதித்து வரும் நிலையில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைக்கான ஐடி சேவையும் ஒரு பகுதி தான் என இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இத்துறை வர்த்தகத்தை மேம்படுத்தவே நோஹா கன்சல்டிங் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளதாக இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒரு வருடத்தில் 3 நிறுவனம்
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இன்போசிஸ் நிறுவனம் அமெரிக்காவில் 3 நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதில் பனாயா நிறுவனம் 200 மில்லியன் டாலருக்கும், ஸ்காவா நிறுவனத்தை 120 மில்லியன் டாலருக்கும், தற்போது நோஹா கன்சல்டிங் நிறுவனத்தை 70 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது.
விஷால் சிக்கா
இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைவரான விஷால் சிக்கா தலைமையில் இந்நிறுவனம் புதிய துறைகளில் காலதடம் பதிக்கதிட்டமிட்டுள்ளது. இத்திட்டங்களைச் செயல்படுத்த இந்தியா உட்பட உலக நாடுகளில் உள்ள ஸ்டாட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யவும், நிறுவனங்களை முழுமையாகக் கைப்பற்றவும் மிகப்பெரிய அளவில் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இன்போசிஸ்
நிறுவனங்களைத் தொடர்ந்து கைபற்றிவரும் இன்போசிஸ் கூடிய விரைவில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு இணையாக வருவாய் மற்றும் வர்த்தகத்தைப் பெற உள்ளது. மேலும் விஷால் சிக்கா தலைமையில் நாட்டின் சிறந்த டெக்னாலஜி நிறுவனமாகவும் திகழும் எனச் சந்தை ஆய்வுகள் தெரிவிக்கிறது.
எண்ணெய் மற்றும் எரிவாயு
இன்போசிஸ் நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ள நோஹா கன்சல்டிங் நிறுவனம் இத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு ஐடி சேவை மட்டும் அல்லாமல் பல பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக இத்துறை சார்ந்த நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்யப்படுபவை, இதனால் முதலீட்டாளர்கள் கூடிய விரைவில் பணத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டுள்ளாதல். எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களை அமைப்புதலில் துவங்கி, இதனை நிர்வாகம் செய்யும் திட்டங்கள் வரை வடிவமைக்கிறது.
இந்நிறுவனத்தின் மூலம் இன்போசிஸ் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சார்ந்த வர்த்தகத்தில் புதிய உச்சத்தை எட்ட உள்ளது.


Click it and Unblock the Notifications