மும்பை: உலகின் முன்னணி நிதியியல் மற்றும் முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் தனது இந்திய சந்தையின் மியூச்சவல் ஃபண்ட் வர்த்தகத்தை முழுமையாக, அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் கேபிட்டல் அசர்ட் மேனேஜ்மென்ட் (RCAM) நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது.
இதன் மூலம் 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய மியூச்சவல் ஃபண்ட் சந்தையில் இருந்து கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் வெளியேறியுள்ளது.

இந்திய சந்தையில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் 12 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை ஆர்கேம் (RCAM) என்று அழைக்கப்படும் ரிலையன்ஸ் கேபிட்டல் அசர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் 243 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் ரிலையன்ஸ் மியூச்சவல் ஃபண்ட் நிறுவனம் மத்திய அரசின் CPSE என்று சுருக்கமாக அழைக்கப்படும் Central Public Sector Enterprises வர்த்தக நிதியை முழுமையாக மேலாண்மை செய்ய உள்ளது.

இப்பரிமாற்றத்திற்காக இரு நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பரிமாற்ற நடவடிக்கை நடப்பு நிதியாண்டுக்குள் முடிவடையும் என ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தான் ஆர்கேம் (RCAM) நிறுவனம் செயல்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications