மும்பை: வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கி பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்திய சந்தையில், ஒய்வுதீய திட்டங்களில் அதிகளவிலான முதலீட்டுச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச்சந்தையைப் போல ஓய்வூதிய சந்தையிலும் என்ஆர்ஐ முதலீடுகளுக்கு மிகவும் சாதகமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி
மத்திய அரசின் ஒப்புதல்களுடன் தேசிய ஓய்வூதிய திட்டத்தில், FEMA 1999 சட்டத்தின் கீழ் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.
என்ஆர்ஐ
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள என்பிஎஸ் எனப் பரவலாக அழைக்கப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இன்று முதல் என்ஆர்ஐகள் முதலீடு செய்யலாம்.
இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கான தகுதிகளில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
கணக்குகள்
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யத் தற்போது தாங்கள் வைத்திருக்கும் NRE/FCNR/NRO கணக்குள் மூலமாகவே முதலீடு செய்யலாம்.
தேசிய ஓய்வூதிய திட்டம்
இந்திய மக்களுக்காக ஓய்வுபெற்ற பின் தங்களது நிதி தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்காகவே ஜனவரி 1, 2009ஆம் ஆண்டுத் தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்ட துவக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இதன் பின் மே 1, 2009ஆம் ஆண்டு முதல் அனைத்து மாத சம்பளக்காரர்களுக்கும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications