டெல்லி: இந்திய ஈகாமர்ஸ் வர்த்தகத் துறையின் வளர்ச்சி மிகவும் வலுவான நிலையில் காணப்படுவதுடன் 2019 ஆம் ஆண்டுகளில் இத்துறையின் வளர்ச்சி 35 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்திய ஈகாமர்ஸ் வர்த்தக வளர்ச்சி வலுவான நிலையில் இருப்பதோடு கணிப்புகளின் படி 35 பில்லியன் டாலர் வர்த்தக அளவை 2019 ஆண்டுகளில் எட்டும்" என நோமுரா அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.
கவனம் தேவை..!
இனி வரும் காலங்களில் இத்துறை நிறுவனங்களை லாபகரமான நிலையில் இயங்குவதற்கு அதிகளவிலான கவனத்தைச் செலுத்த வேண்டும் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
லாபத்தில் பாதிப்பு
இத்துறையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகளவில் இருந்தாலும், நிறுவனங்கள் அதிகளவிலான தள்ளுபடி மற்றும் சலுகைகள் அளிக்கப்படுவதால் லாப அளவுகள் அதிகளவில் குறைந்து நஷ்டத்தை அடையவும் வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கிறது.
முக்கியத் துறையில் முதலீடு தேவை..
இதில் மேலும் குறிப்பிட்டுள்ள விவரங்கள்படி இத்துறையின் சில பகுதிகளில் முக்கியமான வளர்ச்சி தேவைப்படுகிறது. துறைகள் விரிவாக்கம், குறைந்த தள்ளுபடிகள், சரக்குப் போக்குவரத்து முன்னேற்றம் மற்றும் வணிக வரி செயல்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
இதற்கான பணிகள் நடந்துவந்தாலும் இவை பெரும் முதலீடு தேவைப்படும் பகுதிகளாக இருக்கின்றன என்று இந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.
நோமுரா
நோமுரா அமைப்பின் கருத்துப்படி, இந்திய ஈகாமர்ஸ் வர்த்தக நிறுவனங்களின் விழாக்கால விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தாலும் சீனா மற்றும் அமெரிக்காவை ஒப்பிடுகையில் பரபரப்பு குறைவாகவே உள்ளது.
அலிபாபா
சீனாவில், அலிபாபா நிறுவனம் ஒரு நாள் வர்த்தகத்தின் உச்ச சாதனை அளவாக 9 பில்லியன் டாலர் அளவிற்குக் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி விற்பனை செய்தது.
அதேபோல் அமெரிக்காவில் சைபர் டே (நன்றியுரைக்கும் நாளை அடுத்து வரும் திங்கட்கிழமை) அன்றும் ப்ளாக் ஃப்ரைடே எனப்படும் வெள்ளிக்கிழமை அன்றும் சுமார் தலா 3 பில்லியன் டாலர் அளவிற்கு 2014 ஆண்டு விற்றுச் சாதனை படைத்தது.
விழாக்கால விற்பனை
சர்வதேச சந்தையை ஒப்பிடும்போது இந்தியாவின் விழாக்கால விற்பனை 4 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விழாக்காலமான அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான விற்பனை ஈகாமர்ஸ் விற்பனை நிறுவனங்களின் ஆண்டின் மொத்த விற்பனையில் 35 முதல் 40 சதவிகிதமாக உள்ளது.
இணைய விற்பனை
டெக்னோபாக் என்ற இந்திய இணைய விற்பனை நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் 7 பில்லியன் டாலர் அளவிற்குப் பதிவு செய்ததோடு வரும் ஆண்டில் அது 10 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் ஆண்டின் விழாக்கால விற்பனை 4 பில்லியன் டாலர் அளவிற்கு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications