மும்பை: உலகின் முன்னணி இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான நிறுவனமான லார்சன் அண்ட் டியூப்ரோ, செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் சுமார் 16 சதவீத லாப உயர்வில் 996 கோடி ரூபாய் பெற்றுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் கடந்த வருடம் 840 கோடி ரூபாயாக இருந்தது.

எல் அண்ட் டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் இருந்த எல் அண்ட் டி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனையின் நிறுவனத்தின் லாப அளவுகள் 309 கோடி ரூபாய் உயர்ந்துள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி சங்கர் ராமன் தெரிவித்துள்ளார்.
இக்காலகட்டத்தில் எல் அண்ட் டி நிறுவனத்தின் வருவாய் உயர்வுகளின் அளவு 15 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மேலும் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை அளவுகள் 11 சதவீத உயர்ந்து 23,393 கோடி ரூபாயாக உள்ளது, கடந்த நிதியாண்டில் இதன் அளவு 21,159 கோடி ரூபாயாக இருந்தது.
அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் 2வது காலாண்டில் சுமார் 28,620 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் எல் அண்ட் டி நிறுவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications