டெல்லி: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்டர்நெட் சேவைக்கு அதிகளவில் கட்டணத்தை வசூல் செய்வதாகப் புகார்கள் எழுந்து வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 50 சதவீத கேஷ்பேக் மற்றும் அளவில் பாடல்கள் டவுன்லோடு ஆஃபர்களை அளித்து அசத்தியுள்ளது.
டேட்டா பேக்
ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர் இரவு 12.00 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தும் டேட்டா அளவில் 50 சதவீதத்தைத் திரும்பவும் தங்களது கணக்கில் சேர்க்கப்படும் என ஏர்டெல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
படம் மற்றும் பாடல் பதிவிறக்கம்
அதுமட்டும் அல்லாமல் WYNK மொபைல் ஆப் மூலம் மாதம் 5 திரைப்படங்களும், கணக்கில்லா பாடல்களும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏர்டெல் சலுகை அளித்துள்ளது.
ஸ்ரீநி கோபாலன்
இதுகுறித்துப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் வர்த்தகத் தலைவர் ஸ்ரீனி கோபாலன் கூறுகையில், ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள டேட்டா பேக் மற்றும் பதிவிற்றக ஆஃபர்களைத் தற்போது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அளித்துள்ளோம்.
கூடிய விரைவில் இதைப் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
இரவு நேரம்
ஏர்டெல் நிறுவன சேவைகள் தனது வாடிக்கையாளர்கள் காலையில் அதிகளவில் பயன்பட்டு வந்தாலும், இரவு நேரங்களில் மிகவும் குறைவான அளவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனைச் சமன் செய்யவே ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய சேவை அறிமுகப்படுத்தியுள்ளது.
எப்படிப் பெறுவது?
வாடிக்கையாளர் இந்தச் சேவையைப் பெற 121 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அல்லது, 55555 எண்ணிற்கு மிஸ்ட் கால் அல்லது மைஏர்டெல் ஆப்பில் லாக்இன் செய்து சலுகைகளைப் பெற வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications