டெல்லி: ரஷ்யா நிறுவன கூட்டணியில் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை அளித்து வரும் எம்டிஎஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தை முழுமையாக, அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
கடந்த 7 வருடத்தில் இந்நிறுவனத்தில் நடந்த மிகப்பெரிய வர்த்தகத்தில் இந்த வர்த்தகக் கைப்பற்றுதல் மிக முக்கியமானது.
சிஸ்டமா ஷாம் டெலிசர்வீடஸ் லிமிடெட்
சிஸ்டமா என்னும் ரஷ்ய நிறுவனத்தின் கிளை தான் சிஸ்டமா ஷாம் டெலிசர்வீடஸ் லிமிடெட். இந்நிறுவனம் இந்தியாவில் எம்டிஸ் என்னும் பிராண்ட் பெயரில் சுமார் 9 மில்லியன் வாடிக்கையாளர்களுக்குத் தொலைத்தொடர்பு சேவை அளித்து வருகிறது.
இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 1,500 கோடி ரூபாய் தான். இவ்வளவு சிறிய நிறுவனத்தை எதற்கு வாங்க வேண்டும்??
எதற்கு வாங்க வேண்டும்..?
வருவாய் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் மிகவும் சிறிய நிறுவனமான இருந்த போதிலும், இந்நிறுவனத்திடம் உள்ள 4ஜி அலைக்கற்றை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு முக்கியத் தேவையாக விளங்குகிறது.
பங்கு பரிமாற்றம்
சிஸ்டமா நிறுவனத்தின் வர்த்தகம் முழுமையாகக் கைபற்றிய ஆர்காம் எனப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இந்நிறுவனத்திற்கு 290 மில்லியன் டாலர் மதிப்புள்ள 10 சதவீத நிறுவனப் பங்குகளை அளிக்கிறது.
கட்டணங்கள்
மேலும் சிஸ்டமா நிறுவனம் ரஷ்ய பில்லியனர் Vladimir Yevtushenkov's Sistema அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றைக்கான கட்டணங்கள் மற்றும் செலவுகளையும் ஆர்காம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
4,500 கோடி ரூபாய் டீல்
இந்த ஒப்பந்தம் குறித்த முழுமையான நிதி விபரங்களை இரு நிறுவனங்களும் வெளியிடாத நிலையில், இந்த ஒப்பந்தம் குறித்து ஒரு அதிகாரி கூறுகையில், ஆர்காம் மற்றும் சிஸ்டமா நிறுவனங்களுக்கு மத்தியில் செய்யப்படும் இந்த மொத்த டீல் இன் மதிப்பு 686 மில்லியன் டாலர் அதாவது 4,500 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார்.
வருடத்திற்கு 390 கோடி ரூபாய்
சிஸ்டமா நிறுவனத்தின் மொபைல் வர்த்தகத்தைக் கைப்பற்றியதற்காக ஆர்காம் அடுத்த 10 வருடத்திற்கு ஒவ்வொரு வருடமும் 390 கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு துறை..
இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் முக்கியமான ஒன்று தொலைத்தொடர்பு துறை தான். இந்நிலையில் இத்துறையில் ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் கடுமையான பேட்டி போட்டு வரும் நிலையில் ரிலையன்ஸ் கூட்டணிகள் இணைய உள்ளது.
இதனால் இந்திய தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய புரட்சி உண்டாகும்.
அனில் மற்றும் முகேஷ் கூட்டணி
முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் 4ஜி சேவை இந்தியா முழுவதும் அமல்படுத்த அனில் அம்பானியின் கூட்டணி வைத்துள்ளார்.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications