டெல்லி: 2015ஆம் நிதியாண்டின் அக்டோபர் மாதத்தில் புதிய ஆர்டர்களின் மூலம் உற்பத்தி அளவுகள் உயர்ந்ததைத் தொடர்ந்து இந்திய சேவைத் துறையும் புதிய வர்த்தகத் துவக்கத்தின் மூலம் 8 மாத உயர்வை எட்டியுள்ளதாக நிக்கி ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் இந்திய நிறுவனங்களுக்குப் புதிய ஆர்டர்கள் குவிந்ததால், நிறுவனம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. இதன் காரணமாகச் செப்டம்பர் மாதத்தில் 51.3 ஆக இருந்த நிக்கி பிஸ்னஸ் ஆக்டிவிட்டி இன்டக்ஸ் அக்டோபர் மாதத்தில் 53.2 ஆக உயர்ந்ததுள்ளது.
இந்நிலையில் உற்பத்தி மற்றும் சேவைத்துறைக்கான பிஎம்ஐ அவுட்புட் இன்டக்ஸ் குறியீடு அக்டோபர் மாதத்தில் 52.6 ஆக உயர்ந்துள்ளது.
பொதுவாக இக்குறியீடுகள் 50 புள்ளிகளுக்கும் அதிகமாக இருந்தால் சந்தை வளர்ச்சி பாதையில் உள்ளதாகப் பொருள்.
அக்டோபர் மாத காலத்தில் உற்பத்தி மற்றும் சேவைத் துறையின் திடீர் வளர்ச்சியின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி புதிய வேகத்தில் இயங்கத் துவங்கியது. மேலும் நாட்டின் உற்பத்தி அளவுகளுக்குத் தொடர்ந்து உயர்வு நிலையை அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தனியார் துறை நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் சேவைத்துறையின் வளர்ச்சியின் காரணமாகவே பிஎம்ஐ அவுட்புட் இன்டக்ஸ் குறியீடு அக்டோபர் மாதத்தில் 52.6 ஆக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications