ஹாங்காங்: ஆசிய சந்தையை மையமாகக் கொண்டு செயல்படும் பிரட்டன் வங்கியில் நிறுவனமான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், 2015ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நஷ்டத்தைச் சந்தித்ததுள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய பாதிப்புகளை உருவாகியுள்ளது.
நிறுவனத்தை இயல்பு நிலைக்குத் திருப்ப மறுசீரமைப்பு நடவடிக்கையை அமல்படுத்திச் சுமார் 15,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
5,000 ஊழியர்கள்
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் நிறுவனத்தின் நிதிநிலையைச் சமாளிக்கச் சுமார் 15,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவும், 5.1 பில்லியன் டாலர் மூலதனத்தைத் திரட்டவும் திட்டமிட்டுள்ளது.
3 பில்லியன் டாலர் சேமிப்பு
இவ்வங்கியின் மறுசீரமைப்பு நடவடிக்கையில் பணியாளர்கள் வெளியேற்றும் மிகப்பெரிய பங்கு வகுக்கிறது. 15,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்வதன் மூலம் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வருடத்திற்கு 3 பில்லியன் டாலர் நிதியைச் சேமிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
நஷ்டம்
2015ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் வரி செலுத்துவதற்கு முன்பு எதிர்பாராத விதிமாக 139 மில்லியன் டாலர் நஷ்டம் அடைந்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 1.53 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
18.4% வீழ்ச்சியில் வருவாய்
செப்டம்பர் மாதம் முடிந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவுகள் 18.4 சதவீதம் சரிந்து 3.68 பில்லியன் டாலராக இருந்தது.
மூலதன திரட்டல்
மேலும் நிறுவனத்தின் நிதிநிலையை மேம்படுத்த 5.1 பில்லியன் டாலர் வரை நிதிதிரட்ட திட்டமிட்டுள்ளது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்.


Click it and Unblock the Notifications