மும்பை: இந்தியாவில் உருவாகும் ஸ்மார்ட் சிட்டிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட டெக்னாலஜி நிறுவனங்களுக்கு உதவிக் கரம் நீட்ட எப்போதும் தயாராக உள்ளது என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்ய நாடெல்லா தெரிவித்தார்.
மேலும் அவர் இந்தியாவில் உள்ள ஸ்டாப் அப் கலாச்சாரம் மற்றும் ஈகாமர்ஸ் துறையின் வளர்ச்சி தனக்கு வியப்புக்குரியதாக உள்ளது எனத் தெரிவித்தார்.
ஹைதராபாத்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது இந்திய தலைமை அலுவலகத்தில் மிகப்பெரிய அளவில் ‘Future Unleashed: Accelerating India,' என்னும் நிகழ்ச்சியை 100க்கும் மேற்பட்ட ஸ்டார்அப் மற்றும் முக்கிய நிறுவன தலைவர்கள் மத்தியில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்ய நடெல்லா அவர்களும் கலந்துகொண்டார்.
ஈகாமர்ஸ் நிறுவனங்களுடன் கூட்டு..
இந்நிறுவனத்தின் கிளவுட் சேவையின் மூலம் மேம்படுத்தப்பட்ட இணையதளச் சேவையை மக்களுக்கு அளிக்கச் சத்ய நாடெல்லா ஜஸ்ட்டயல், பேடிஎம் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்துள்ளார்.
கிளவுட் சேவை
ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் ஸ்மார்ட் சிட்டிகளில் இருக்கும் பல ஸ்டாட்அப் நிறுவனங்களுக்கும் தங்களது கிளவுட் சேவையை அளிக்க உள்ளதாகச் சத்ய நாடெல்லா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
மேலும் இச்சேவையின் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லூமியா 950, 950X' மற்றும் சர்பேஸ் ஃபரோ 4 ஆகியவற்றையும் இணைக்கும் திட்டத்தையும் அறிவித்தார்.
3 டேட்டா சென்டர்கள்
இந்திய சந்தையில் தனது கிளவுட் கம்பியூட்டிங் சேவையை மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் 12 மாதங்கள் முன் 3 இடங்களில் புதிய 3 டேட்டா சென்டர்களை அமைத்தது. இந்த டேட்டா சென்டர்கள் புனே, மும்பை மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications